உருமாறி போகவும் தெரியும்.. பதுங்கி அடிக்கவும் தெரியும்.. ஹி ஈஸ் கோப்ரா.. மிரட்டலான ட்ரெயிலர் இதோ!

சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகினற்னர்.

இந்நிலையில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியா சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ளது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் எப்போதுமே தன்னுடைய படங்களின்மூலம் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கடத்தி வருகிறார். சமீபத்தில் அவரது மகான் படம் வெளியாகி ரசிகர்களுக்கு சிறப்பான எக்ஸ்பீரியன்சை கொடுத்தது. படத்தில் ஒரேயொரு குறை, படம் ஓடிடியில் வெளியானது மட்டுமே. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ஓடிடியில் வெளியானது.

கோப்ரா படம்

கோப்ரா படம்

இந்நிலையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் வரும் 31ம் தேதி திரையரங்குகள்ல ரிலீசாக உள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார் விக்ரம் மற்றும் படக்குழுவினர். படத்தின் பிரமோஷன் டூரை அவர் நடத்தி வருகிறார்.

கோப்ரா பிரமோஷன்ஸ்

கோப்ரா பிரமோஷன்ஸ்

இந்த பிரமோஷன் டூர், திருச்சியில்தான் முதலில் துவங்கியது. தொடர்ந்து மதுரை, கோவை என்று இந்த டூர் தொடர்ந்து வருகிறது. போகும் இடத்திலெல்லாம் விக்ரமிற்கும் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். எங்கும் திரளான ரசிகர்களைத்தான் பார்க்க முடிந்தது. விமானநிலையத்தில் துவங்கும் இந்த வரவேற்பு தொடர்ந்து பிரமோஷன் நடைபெறும் இடங்களிலும் தொடர்ந்து வருகிறது.

20க்கும் மேற்பட்ட கெட்டப்புகள்

20க்கும் மேற்பட்ட கெட்டப்புகள்


கோப்ரா படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தில் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் காணப்படுகிறார். அத்தனை கெட்டப்பிலும் அது விக்ரமா என்ற கேள்வியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

கோப்ரா ட்ரெயிலர்

கோப்ரா ட்ரெயிலர்

இந்த ட்ரெயிலரும் இந்தக் கெட்டப்புகளை தாங்கி வெளியாகியுள்ளது. மிரட்டுகிறது. ஹி ஈஸ் கோப்ரா, உருமாறி போகவும் தெரியும்.. பதுங்கி அடிக்கவும் தெரியும் என்று பஞ்ச் டயலாக் பேசுகிறது. தி மோர் யூ ஹர்ட் மீ.. தி மோர் ஐ ஹர்ட் யூ பேக் என்று விளக்கம் அளிக்கிறது.

சாதாரண கணக்கு வாத்தியார்

சாதாரண கணக்கு வாத்தியார்

இந்த வகையில் போலீசாரிடம் மாட்டும் விக்ரமையும் காட்சிப் படுததுகிறது இந்த ட்ரெயிலர். அதில் நான் சாதாரண கணக்கு வாத்தியார் சார் என்று அவர் கதறுவதை பார்க்கும்போது நமது கண்களும் கலங்குகிறது. ஸ்ரீநிதி ஷெட்டி அழகாக வலம் வருகிறார். அவருக்குதான் ஏதாவது ஆகிவிடுமோ, அதனால்தான் விக்ரம் பழி வாங்குகிறாரோ என்ற எண்ணத்தையும் இந்த ட்ரெயிலர் ஏற்படுத்துகிறது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

மொத்தத்தில் எப்போதுமே ரசிகர்களை என்டர்டெயின் செய்ய எந்த எல்லைக்கும் போகக்கூடியவர் விக்ரம். அந்த வகையில், இந்தப் படம் எல்லைகளை கடந்து ரசிகர்களை மிரட்டும் என்று எதிர்பார்க்கலாம். இப்போதே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திரையரங்குகளில் தெறிக்கும்

திரையரங்குகளில் தெறிக்கும்

வழக்கம்போல சியானின் இந்தப் படமும் திரையரங்குகளில் தெறிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு இந்த ட்ரெயிலரே சாட்சி. வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது இந்த ட்ரெயிலர். படத்தை பார்க்க ரசிகர்களின் கொல மாசு வெயிட்டிங்கை இந்த வியூஸ் காட்சிப் படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X