Vikram :அடுத்தடுத்த புகைப்படங்களால் இணையத்தை அதிரவிடும் விக்ரம்.. பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சம்பவம்!
சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் விக்ரமிற்கு காட்சிகள் குறைவாக இருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில் அவர் அதிரடியாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இதன் கேஜிஎப் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
விக்ரமின் புதிய லுக் : நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களில் பொன்னியின் செல்வன் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார் விக்ரம். எப்போதுமே தான் ஏற்கும் பாத்திரமாகவே மாறிவிடும் திறன் படைத்தவர் விக்ரம். அவருக்கு இந்த கேரக்டரும் சிறப்பாகவே அமைந்தது. படம் பல ஸ்டார்களை கொண்டு வெளியானாலும் தன்னுடைய கேரக்டரை விக்ரம் சிறப்பாகவே கொடுத்திருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. கடந்த பாகத்தை போலவே இந்தப் படமும் அதிகமாக ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் அதிகமான காட்சிகள் இல்லாமல் இருந்த விக்ரமிற்கு இரண்டாவது பாகத்தில் அனைவரையும் கவரும் வகையில் அதிகமான காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். நடிப்பிற்கு தீனி போடும் கேரக்டர்கள் என்றால் விக்ரமிற்கு அல்வா சாப்பிடுவது போல என்ற நிலையில், இந்தக் கேரக்டரும் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பீரியட் படமாக உருவாகிவரும் தங்கலான் படத்தில் வித்தியாசமான கெட்டப்புடன் விக்ரமை பார்க்க முடிகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி மேனன், பசுபதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வரும் 17ம் தேதி விக்ரமின் பிறந்தநாளையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனிடையே இதைக் குறிப்பிடும் வகையில் வெளியான விக்ரமின் கெட்டப்பும் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நீண்ட தலைமுடியுடன் அவர் பழங்கால லுக்கில் காணப்படுகிறார்.

இந்தத் தலைமுடியுடன் அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் விக்ரம். முன்னதாக சில தினங்களுக்கு முன்பு விக்ரமின் போட்டோஷுட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ட்ரெண்டிங்கில் உள்ளது. அவருடைய துருவ நட்சத்திரம் படமும் மே மாதத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே தங்கலான் படமும் இந்த ஆண்டிற்குள் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











