கேஜிஎப்பில் துவங்கும் விக்ரமின் தங்கலான் சூட்டிங்.. எத்தனை நாள் நடக்குது தெரியுமா?
சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
தற்போது பா ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
விரைவில் படக்குழு கேஜிஎப்பில் சூட்டிங்கை துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தங்கலான் படம் உருவாகி வருகிறது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களுக்காக மிகவும் மெனக்கெட்டு நடிப்பவர். அதற்காக எந்த எல்லைக்கும் செல்பவர். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் ரிலீசான நிலையில் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

தங்கலான் படத்தில் விக்ரம்
இந்நிலையில் ஏப்ரலில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகமும் விக்ரமிற்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

பீரியட் படம்
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. பீரியட் படமாக உருவாகிவரும் தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமின் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

கேஜிஎப்பில் சூட்டிங்
அடுத்ததாக படக்குழு கேஜிஎப்பில் சூட்டிங்கை நடத்தவுள்ளது. வரும் 15ம் தேதி படத்தின் சூட்டிங் கேஜிஎப்பில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் 15 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டு படத்தின் சூட்டிங்கை முடிக்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளார்.

உடல் எடையை குறைத்த பார்வதி
சென்னையில் விஜிபியில் இந்த சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தங்கலான் படத்தில் பார்வதி முக்கியமான கேரக்டரில் நடித்துவரும் நிலையில், இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அவர் கணிசமாக குறைத்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்
முன்னதாக தங்கலான் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இதில் வித்தியாசமான விக்ரமை பார்க்க முடிகிறது. இதனிடையே மாளவிகா மோகனனும் படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











