ஆதித்த கரிகாலனாக மாறிய விக்ரம்.. வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீம்.. விரைவில் ட்ரெயிலர்!

சென்னை : நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது பொன்னியின் செல்வன் படம்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இதையொட்டி படத்தின் ப்ரமோஷனை படக்குழுவினர் துவக்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குந்தவை, வந்தியத்தேவன் ஆகியோரின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்


நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்த படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது. சர்வதேச அளவில் இந்தப் படத்திற்கு சிறப்பான ரீச் காணப்பட்டது. நல்ல விமர்சனங்களையும் சிறப்பான வசூலையும் இந்தப் படம் குவித்தது. இதையடுத்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

பொன்னியின் செல்வன் 2 படம்

பொன்னியின் செல்வன் 2 படம்

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அதிகமான காட்சிகள் இல்லாதவர்களுக்குக் கூட இந்த பாகத்தில் அழுத்தமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் ரிலீசாக இன்னும் ஏறக்குறைய ஒரு மாதம் உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷனை தற்போது படக்குழுவினர் துவக்கியுள்ளனர்.

சிறப்பான பர்ஸ்ட் சிங்கிள்

சிறப்பான பர்ஸ்ட் சிங்கிள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிள் அகநக பாடல் வெளியாகி ரசிர்களை கவர்ந்தது. கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் சாம்ராஜ்யத்தின் சிறப்பாக இந்தப் பாடல் அமைந்தது. முன்னதாக குந்தவை மற்றும் வந்தியத்தேவனா த்ரிஷா மற்றும் கார்த்தியின் மாற்றம் எப்படி நிகழ்ந்தது, அதற்காக பின்புலத்தில் யாரெல்லாம் செயல்பட்டனர், அதன் பின்னணி, அதற்கான உழைப்பு, அந்த கேரக்டர்களுக்காக உபயோகப்படுத்தப்பட்ட ஆபரணங்கள், உடைகள் உள்ளிட்டவை இந்த வீடியோக்களில் காணப்பட்டன

ஆதித்த கரிகாலனாக மாறிய விக்ரம்

ஆதித்த கரிகாலனாக மாறிய விக்ரம்


இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் நடிகர் விக்ரம். கடந்த பாகத்தில் இவருக்கு தனியாக பாடல் வைக்கப்பட்டிருந்தது. ஒரு அரசனுக்குரிய கெட்டப்பில் இவர் சிறப்பாக காணப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் இவருக்கான போர்ஷன்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலனாக மாறிய தருணத்தின் சிறப்பையும் தற்போழது படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

 விரைவில் ட்ரெயிலர்

விரைவில் ட்ரெயிலர்

இந்நிலையில் அந்த வீடியோவில் படத்தின் ட்ரெயிலர் உருவாகி வருவதாகவும் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது. முதல் பாகம் சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ள நிலையில், இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X