For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமிற்கு பொறுப்புணர்வு அதிகரிச்சிருக்காம்.. ஏன்னு தெரியுமா.. அவரே சொல்லியிருக்காரு!

    |

    சென்னை : நடிகர் விக்ரம் ஆண்டுகளை கடந்து தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் சேது படத்தின்மூலம் துவங்கிய விக்ரமின் சிறப்பான திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

    56 வயதை கடந்த நிலையிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டுள்ள விக்ரம் இளம் ஹீரோக்களுக்கே டப் கொடுத்து வருகிறார்.

    தளபதி 67ல் விஜய்யுடன் இணையும் கைதி, விக்ரம் பட பிரபலம்… அப்போ இதுவும் லோகேஷ் யுனிவர்ஸ் தானா?தளபதி 67ல் விஜய்யுடன் இணையும் கைதி, விக்ரம் பட பிரபலம்… அப்போ இதுவும் லோகேஷ் யுனிவர்ஸ் தானா?

    நடிகர் விக்ரம்

    நடிகர் விக்ரம்

    என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விக்ரம் தொடர்ந்து சாக்லேட் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்த படம் என்றால் அது சேது படம்தான். இந்தப் படத்தில் தான் எடுத்துக் கொண்ட கேரக்டருக்காக இவர் மேற்கொண்ட சிரமங்கள் தமிழில் யாரும் அதுவரை மேற்கொள்ளாதது.

    சிறப்பான சேது கேரக்டர்

    சிறப்பான சேது கேரக்டர்

    தன்னுடைய உடலை பட்டினிப் போட்டு க்ளைமாக்சில் நடித்திருந்தார் விக்ரம். இந்த கேரக்டர் அந்த காலகட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்திலேயே இவர் நடித்திருந்த சியான் கேரக்டர் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்ந்தது. சேது படத்தின்மூலம் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து திரையுலகில் தன்னை மெருகேற்றிக் கொண்டு வெளிப்படுத்தினார் விக்ரம்.

     கலவையான விமர்சனங்களை பெற்ற கோப்ரா

    கலவையான விமர்சனங்களை பெற்ற கோப்ரா

    இவரது அடுத்தடுத்த படங்கள், அடுத்தடுத்த கேரக்டர்கள் ரசிகர்களை கட்டிப் போட்ட நிலையில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம். இந்தப் படங்களில் கோப்ரா கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் படத்தில் விக்ரமின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

    தங்கலான் படத்தில் விக்ரம்

    தங்கலான் படத்தில் விக்ரம்

    இந்தப் படத்தையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் விக்ரம். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம். இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார்.

     ட்விட்டர் பக்கத்தில் விக்ரம்

    ட்விட்டர் பக்கத்தில் விக்ரம்


    தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷனின்போதும் இவர் வெளியிட்ட அடுத்தடுத்த பதிவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் தற்போது தன்னுடைய புதிய கெட்டப்பை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார் விக்ரம். நீண்ட தாடியுடன் தங்கலான் படத்தில் நடித்துவரும் கெட்டப்பின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

     பொறுப்புணர்வை கொடுத்த தாடி

    பொறுப்புணர்வை கொடுத்த தாடி


    நீண்ட தாடி, பின்பக்கமாக கட்டப்பட்ட முடி என வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் இந்தப் புகைப்படங்களில் காணப்படுகிறார். மேலும் இந்த நீண்ட தாடி சிறப்பான பொறுப்புணர்வை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்டும் செய்துள்ளனர்.

    English summary
    Actor Vikram says that his long beard gives great responsibility
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X