பார்வதி ஒரு சயின்டிஸ்ட்.. தங்கலான் சூட்டிங்கில் கொடுத்த ஐடியா.. பிரஸ்மீட்டில் விக்ரம் சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில், சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திலேயே தங்கலான் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பிரிட்டீஷாரின் கீழ், தங்க சுரங்கங்களில் வேலை செய்த தமிழர்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படம் சுதந்திர தினத்தில் வெளியாவது பொருத்தமானது என்றே ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர்.

Vikram Thangalaan movie Parvati

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் எப்போதுமே தன்னுடைய கேரக்டரை மிரட்டலாக அமைப்பதில் திறமைசாலி. சேலஞ்சிங்கான ஒரு கேரக்டரை எடுத்துக் கொண்டு பல சோதனைகளை தாண்டி, அந்தக் கேரக்டரை சாதனையாக்குவதில் அவரை மிஞ்ச ஆளில்லை என்று கூறலாம். அந்த வகையில் அவரது நடிப்பில் பல படங்கள் மிகச்சிறப்பாக அமைந்தவை. இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கோலார் தங்கவயல்களில் தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இநத்ப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தங்கலான் படம்: படத்தில் வயதான மற்றும் இளைஞர் கேரக்டர்களில் விக்ரம் நடித்துள்ள நிலையில், அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஜிவி பிரகாஷ் இசையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சமீபத்தில் படத்தின் இசை வெளியீடும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் படத்திற்கான பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கலான் பிரஸ்மீட்: இதில் விக்ரமுடன், மாளவிகா, பார்வதி, பசுபதி, பா ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது படத்தின் பிரஸ்மீட் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று விக்ரம், மாளவிகா, பார்வதி உள்ளிட்டவர்கள் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் நடிகை பார்வதியை சயின்டிஸ்ட் என்று புகழ்ந்தார். வெட்டவெளியில் தாங்கள் லீட் கேரக்டர்கள் மட்டுமில்லாமல் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்களும் இணைந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்த காட்சிகளில் நடிக்கும் சூழலே சூட்டிங் ஸ்பாட்டில் காணப்பட்டது என்றும் இதற்கு பிரத்யேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பார்வதி ஒரு சயின்டிஸ்ட்: தினந்தோறும் உடலில் டாட்டூ, மண், ஹேர்ஸ்டைல் போன்றவற்றை அமைக்க 5 மணிநேரங்கள் பிடிக்கும் என்றும் இதேபோல மேக்கப்பை அழிக்கவும் ஒரு மணிநேரம் ஆகும் என்றும் கூறிய விக்ரம், ஆனால் தங்களுடன் ஒரு விஞ்ஞானி பார்வதி இருந்ததாகவும் அவர் மேக்கப்பை உடனடியாக கலைக்க தங்களுக்கு ஒரு மேஜிக்கை சொல்லிக் கொடுத்ததாகவும் மைதா மாவுடன் எண்ணெயை சேர்த்து உடலில் தடவினால் அது சோப் போன்று நுரைத்து உடனடியாக மேக்கப்பை கலைக்கும் என்று பார்வதி கூறியதை கேட்டு தாங்கள் அதன்படி விரைவில் மேக்கப்பை கலைத்ததாகவும் விக்ரம் கூறினார்.

ரஞ்சித் குறித்து விக்ரம் நெகிழ்ச்சி: இதன்மூலம் தங்களுக்கு தூங்குவதற்கு அதிகமான நேரம் கிடைத்ததாகவும் அவர் பார்வதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தப் படத்தின்மூலம் ரஞ்சித் தங்களுக்கு ஒரு மந்திர உலகத்தை கொடுதததாகவும் அதில் சென்றவுடன் தாங்கள் அனைத்தையும் மறந்துவிட்டதாகவும் சியான் மேலும் உற்சாகம் தெரிவித்துள்ளார். பாம்பு, தேள் போன்றவை உலவும் இடத்தில் மிகுந்த சிரமத்திற்கிடையில் இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளதாகவும் ரசிகர்கள் நினைக்கும் விஷயத்தை தாண்டி இந்தப் படம் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றும் விக்ரம் நெகிழ்ச்சியுடன் பேசினார். ரஞ்சித்திற்கு தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X