கல்லா கட்டத் துவங்கிய விக்ரமின் வீரதீர சூரன் படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை யார் கைப்பற்றியிருக்காங்க?

சென்னை: நடிகர் விக்ரமின் அடுத்தப்படமாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றது வீரதீர சூரன் படம். சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அருண்குமார் கூட்டணியில் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தேனி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படம் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் மீண்டும் கமர்ஷியல் பாதைக்கு விக்ரம் திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

vikram veera dheera sooran movie arunkumar

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கூட்டணியில் தன்னை இணைத்து வருகிறார். அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் மட்டுமில்லாமல் கவனம் பெற்றுள்ள இயக்குநர்களுடனும் இவரது கூட்டணி தொடர்ந்து வருகிறது. அடுத்தடுத்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களில் ஆதித்த கரிகாலனாக நடித்து கவனம் பெற்ற விக்ரம் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கலான் படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தின் கதைக்களம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பீரியட் படமாக உருவாகியிருந்தது.

வீரதீர சூரன் படம்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சித்தா, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் படத்தில் விக்ரம் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் முதலில் ரிலீசாகவுள்ளதாகவும் இதையடுத்தே படத்தின் முதல் பாகம் உருவாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வீரதீர சூரன் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

vikram veera dheera sooran movie arunkumar

தமிழக வெளியீட்டு உரிமை: இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் துவங்கியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் செந்தில் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக டிடி ரிட்டர்ன்ஸ், பார்க்கிங், கருடன், மகாராஜா உள்ளிட்ட படங்களை இவர் வெளியிட்டுள்ளார். அடுத்ததாக தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள ப்ளடி பெக்கர் படத்தையும் இவர் தமிழகத்தில் வெளியிட உள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக விக்ரமின் வீரதீர சூரன் படம் இணைந்துள்ளது. படத்தில் விக்ரமுடன், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சித்திக் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

கமர்ஷியல் கேரக்டரில் விக்ரம்?: வீரதீர சூரன் படத்தின் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில், ஹெச்ஆர் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் காளி என்ற கேரக்டரில் சியான் விக்ரம் நடித்துள்ளார். விக்ரமை வைத்து அருண்குமார் இந்தப் படத்தில் மேஜிக்கை செய்துள்ளதாக ஹெச்ஆர் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களில் பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசனாகவும் தங்கலான் படத்தில் மாற்றுக் கோணத்திலும் நடித்திருந்த விக்ரம் இந்தப் படத்தில் கமர்ஷியல் கேரக்டரில் இணைந்துள்ளதாக கூறப்படுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X