Anniyan: விக்ரம் ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்.. ரீ ரிலீஸ் ஆகும் அந்நியன்.. எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி இருந்த இந்தப் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த சூழலில் இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது.

இந்நிலையில் தற்போது இந்த படம் ரீ ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் உற்சாகம் அடைந்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் 3 வெவ்வேறு கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் விக்ரம். அந்நியன், ரெமோ மற்றும் அம்பி என அவரது கெட்டப்புகளின் மாற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Actor Vikram s Anniyan movie to be re -release on May 17th in Telugu movie

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மூன்று வெவ்வேறு கெட்டப்களில் விக்ரம் நடித்திருந்தார். அந்நியன், ரெமோ மற்றும் அம்பி என அவரது கேரக்டர்கள் மற்றும் அதன் மாற்றங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தன. மிகப்பெரிய அளவில் அதிகமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது இந்தப்படம். படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்நியன் படம்: படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்களுக்காக டிஜிட்டலில் ரீ மாஸ்டர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் தமிழில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 17ம் தேதி அந்நியன் படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தமிழில் அதிகமான படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகின்றன. முன்னதாக ரஜினியின் பாபா, தனிக்காட்டு ராஜா, கமலின் வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அந்த வகையில் கடந்த 20ம் தேதி நடிகர் விஜய்யின் கில்லி படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தெலுங்கில் அந்நியன் ரீ-ரிலீஸ்: மேலும் கடந்த 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி தீனா உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக விக்ரமின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்நியன் படம் தெலுங்கில் வரும் 17ம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து துருவ நட்சத்திரம், தங்கலான் படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் தங்கலான் படம் கடந்த ஜனவரி மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்த காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே விக்ரம் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றான அந்நியன் படம் ரீ ரிலீசாகவுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X