Chiyaan 62: சியான் 62 பட அறிவிப்பு வெளியாவதில் தாமதம்.. தொழில்நுட்ப கோளாறு காரணம்!

சென்னை: நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

தொடர்ந்து இந்த ஆண்டிலேயே விக்ரமின் துருவ நட்சத்திரம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. கௌதம் மேனன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Actor Vikrams Chiyaan 62 movie announcement delayed because of technical issues

இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் நடித்துள்ள தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சேது என்ற படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கேரக்டரின் செல்லப்பெயரான சியான் என்ற பெயர் இவருக்கும் ஒட்டிக் கொண்டது. இந்தப் படத்தை தொடர்ந்து இவருக்கு சிறப்பான இயக்குநர்கள் மற்றும் சிறப்பான படங்கள் தொடர்ந்து அமைந்து தமிழில் முன்னணி நடிகராக இவரை ஏற்றி விட்டுள்ளது. தொடர்ந்து ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களுடன் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் 2: கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமான பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி விக்ரமிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகமும் மிகப்பெரிய வசூலையும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது. அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

தங்கலான் படம்: இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டி இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தின் டீசர் வரும் நவம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Actor Vikrams Chiyaan 62 movie announcement delayed because of technical issues

சியான் 62 படம்: இந்தப் படங்களை தொடர்ந்து விக்ரமின் அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விக் கேட்டு வருகின்றனர். இதனிடையே சியான் 62 படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளதாக முன்னதாக விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் அந்த அறிவிப்பு குறித்து பார்த்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறிவிப்பு தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அடுத்தடுத்த அறிவிப்புகள்: தொடர்ந்து தன்னுடைய படங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் விக்ரம். முதலில் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், அடுத்ததாக தங்கலான் படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் குறித்து அப்டேட் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்றைய தினம் சியான் 62 படத்தின் அப்டேட்டும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை மேற்கொள்ளாமல் இருந்தார் விக்ரம். இதனிடையே தற்போது ரசிகர்களின் அந்த ஏக்கமும் தீரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X