Vikram: வெளியானது சியான் 63 பட அறிவிப்பு.. சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய விக்ரம்!
சென்னை: நடிகர் விக்ரம் பல ஆண்டுகளை கடந்து சினிமாவில் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது கேரியர் பெஸ்டாக பல படங்கள் அமைந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமாருடன் இணைந்து வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக சியான் 63 படம் குறித்த அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது தங்கலான் படம். இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்த நிலையில் படம் கலவையான விமர்சனங்களை வெற்றது. ஆயினும் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது. படத்தின் ஸ்கிரிப்ட் உள்ளிட்டவை பலவாறாக பாராட்டுகளை பெற்றிருந்தன. சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முந்தைய கேஜிஎப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை கூறும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. பீரியட் படமாக வெளியான இந்த படத்தில் பல அரசியல்களை பேசியிருந்தார் ரஞ்சித்.
வீர தீர சூரன் படம்: தங்கலான் படம் ஓடிடியில் வெளியாவதில் சில பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இந்த படம் netflix-ல் வெளியாகியுள்ளது. திரையரங்கில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் பலரும் ஓடிடியில் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் அவருடன் இணைந்து லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் ஜனவரி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி ரிலீஸ்: இதையொட்டி டீசரையும் வெளியிட்ட படக்குழுவினர் ஜனவரி மாத வெளியீடு என அறிவித்துள்ளனர். பொங்கல் ரிலீசாக இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கல் ரேஸிலிருந்து படம் விலகியுள்ளது. அடுத்த மாதம் 24ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக சியான் விக்ரம் எந்த தயாரிப்பாளருடன் யாருடைய இயக்கத்தில் இணைவார் என்று தொடர்ந்து பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் இன்றைய தினம் அவற்றுக்கான விடை கிடைத்துள்ளது.
சியான் 63 அறிவிப்பு: சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மண்டேலா, மாவீரன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தன்னுடைய சியான் 63 படத்தில் விக்ரம் இணையவுள்ளார். இதுகுறித்து சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூட்டணி குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே சியான் 63 படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை விக்ரம் தாறுமாறாக உயர்த்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தங்கலான் படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற விக்ரம், தற்போது சியான் 63 படத்திற்காக 50 கோடி ரூபாய்களை சம்பளமாக பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தாறுமாறாக உயர்ந்த சம்பளம்: தங்கலான் படத்தை காட்டிலும் தன்னுடைய சம்பளத்தை விக்ரம் தாறுமாறாக உயர்த்தியுள்ளார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்த விக்ரம் அந்த படத்திற்காக அதிகமான சம்பளத்தை பெறவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











