Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் படத்தின் சென்சார் நிறைவு.. நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Actor Vikrams Dhruva natchathiram movie censored U/A and big announcement expected tomorrow

நாளை வெளியாகும் துருவ நட்சத்திரம் படத்தின் அறிவிப்பு: நடிகர் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக தங்கலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம். படத்தில் விக்ரமுடன் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். முன்னதாக படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்திருந்த நிலையில், தற்போது கதையில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெறவில்லை.

Actor Vikrams Dhruva natchathiram movie censored U/A and big announcement expected tomorrow

இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் உலவி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் படக்குழு மேற்கொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் சென்சார் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 11 மணியளவில் இந்தப் படத்தின் புதிய அறிவிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இரு பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் நாளை காலை ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.

இந்தப் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் கௌதம் மேனனை சந்தித்த நடிகர் விக்ரம், படம் குறித்து பேசியுள்ளார். முன்னதாக படத்தையும் பார்த்த விக்ரம், படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் கடந்த 2017ம் ஆண்டில் எடுக்கப்பட்ட நிலையிலும் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக தற்போதைய சூழலுக்கு தகுந்தாற்போல உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் கௌதம் மேனனுடன் சியான் பேசியுள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X