Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் குறித்த முதல் விமர்சனம்.. இரண்டாவது விமர்சனமும் வந்துடுச்சே!
சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன், கோப்ரா என அடுத்தடுத்தப் படங்கள் விக்ரம் நடிப்பில் வெளியாகின.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது.
துருவ நட்சத்திரம்: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 2016ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் படம் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விகரம் -கௌதம் மேனன் கூட்டணி: விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் கதை ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முன்னதாக படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தில் முன்னதாக இடம்பெற்றிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தள்ளிப் போகிறதா ரிலீஸ்?: இந்தப் படத்தின் ரைட்ஸ் விற்பனை ஆகவில்லை என்றும் அதனால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ஓடிடி ரைட்சை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் சாட்டிலைட் ரைட்சை கலைஞர் டிவி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடி காரணமாக மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லிங்குசாமி பாசிட்டிவ் விமர்சனம்: இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல இயக்குநர் லிங்குசாமி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தை சமீபத்தில் மும்பையில் பார்த்ததாகவும் படம் அதிசயத்தக்க வகையில் உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் விஷுவல்களும் மிகப்பெரிய அளவில் உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தில் கூலான விக்ரமையும் ஆக்ரோஷமான விநாயகனையும் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல் விமர்சனம்: மேலும் படத்தில் அதிகமான நடிகர்கள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள லிங்குசாமி அனைவரும் பிரமாதமாக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் மற்றும் ஹாரீஸ் இணைந்து மீண்டும் சிறப்பான படத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் வெற்றிக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் குறித்த அவரது முதல் விமர்சனம் ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது.
பைசா வசூல் என்டர்டெயினர்: இதனிடையே படத்தின் இசையமைப்பாளர் ஹாரீசும் தான் படத்தை பார்த்ததாகவும் கௌதம் மேனன் இயக்கத்தில் பெஸ்ட் படமாக இது அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் பைசா வசூல் என்டர்டெயினராக அமையும் என்றும் ஹாரீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஜான் என்ற கேரக்டரில் ஸ்டைலிஷ் லுக்கில் அனைவரையும் கவர்ந்துள்ளார். படத்தின் மேக்கிங்கும் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











