Dhruva Natchathiram: His name is John.. துருவநட்சத்திரம் 2வது சிங்கிளை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!
சென்னை: நடிகர் விக்ரம் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் துருவநட்சத்திரம். நீண்டகாலங்களாக ரிலீசுக்காக இந்தப் படம் காத்திருக்கிறது.
படத்தின் டீசர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், பர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் 2வது பாடலை வெளியிட்ட லோகேஷ்: நடிகர் விக்ரம் தன்னுடைய படங்களை எப்போதுமே ஒரு தவம் போல மேற்கொண்டு, ரசிகர்களுக்கு சிறப்பாக வெளிப்படுத்துவார். தான் ஏற்கும் கேரக்டர்களாகவே மாறுவது இவர் ஸ்பெஷல். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் மிகச்சிறப்பான வரவேற்பை அனைத்து தரப்பிலும் பெற்றுத் தந்துள்ளது. ஆதித்த கரிகாலனாக தான் ஏற்ற கேரக்டராகவே படத்தில் மாறியிருந்தார் விக்ரம்.
இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டில்தான் ரிலீசாகவுள்ளதாக தயாரிப்புத்தரப்பு முன்னதாக தெரிவித்துள்ளது. இதனிடையே விக்ரமின் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் படத்தை கையில் எடுத்துள்ள கௌதம் மேனன், படத்தின் ப்ரமோஷன்களிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது.
இந்நிலையில் இன்றைய தனம் படத்தின் இரண்டாவது சிங்கிளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். His Name is John என்ற இந்தப் பாடலை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிட்டுள்ளார். சில காத்திருப்புகளுக்கு மிகுந்த பலன் இருக்கும் என்றும் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடுவது உற்சாகமாக உள்ளதாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துருவ நட்சத்திரம் படத்தில் கெளதம் மேனன் நமக்காக என்ன மாதிரியான சமாச்சாரங்களை கொண்டு வந்துள்ளார் என்பதை பார்க்க காத்திருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் வில்லன் கேரக்டரில் யார் நடித்துள்ளார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த கேரக்டரை மிகவும் சர்ப்ரைசாக கௌதம் மேனன் வைத்துள்ளார். விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் ரசிகர்களுக்கு மிகுந்த சர்ப்ரைஸ் கொடுத்தது போல இந்த கேரக்டரும் அமையும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











