Vikram: சியான் விக்ரமின் லேட்டஸ்ட் கிளிக்.. அடுத்தப்பட அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சியான் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மல்டி ஸ்டார் படமான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கேரக்டர் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது.

Actor Vikrams latest click makes fans more happy

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் நடித்துள்ள தங்கலான் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த விக்ரமின் லேட்டஸ்ட் கிளிக்: நடிகர் விக்ரம் தொடர்ந்து பல வருடங்களாக ரசிகர்களை தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் கவர்ந்து வருகிறார். சியான் என்று அவரது கேரக்டர் பெயரால் தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விக்ரம், சேது படத்தில் துவங்கிய தன்னுடைய நடிப்புப் பயணத்தை தொடர்ந்து சிறப்பாக்கி வருகிறார். முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் அவை அந்த அளவிற்கு கவனத்தை பெறவில்லை. இதையடுத்து டப்பிங் உள்ளிட்ட பல விஷயங்களை சினிமாவில் செய்துள்ளார் விக்ரம்.

இதனிடையே சேது படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட விக்ரமின் திரைப்பயணம் அதன்பிறகு ஸ்பீட் ப்ரேக் இல்லாமல் மிகச்சிறப்பாக தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரமின் நிறைவேறாத காதல் மிகப்பெரிய கவனத்தை பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரேஸில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வயதான மற்றும் இளைஞர் கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன.

கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகிவரும் நிலையில் விக்ரமின் அடுத்தப்படம் குறித்து அப்டேட் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், தங்கலான் என பிரம்மாண்டமான படைப்புகளில் நடித்துள்ள விக்ரம், தன்னுடைய அடுத்தப்படத்தை கவனமுடன் தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளார். அவரின் அடுத்தப்படமும் சிறப்பாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக தன்னுடைய சியான்62 படத்திற்காக லோகேஷ் கனகராஜின் ஸ்கிரிப்டில் அவரது உதவியாளருடன் விக்ரம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல பிரபல தெலுங்குப்பட இயக்குநருடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தங்கலான் லுக்கிலேயே வித்தியாசமான ஸ்டைலை வெளிப்படுத்திவந்த விக்ரம் தற்போது தன்னுடைய இயல்பான லுக்கிற்கு மாறியுள்ளார். இதனிடையே தற்போது ரசிகர் ஒருவருடன் விக்ரம் எடுத்துள்ள சமீபத்திய கிளிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X