Thangalaan: மினுக்கி.. மினுக்கி.. தங்கலான் படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிள்.. எப்ப ரிலீஸ் தெரியுமா!
சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த சில மாதங்களாக ரிலீசாகாமல் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் குறித்து தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் அறிவித்துள்ளார் இது குறித்து பிரமோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தங்கலான் படம்: நடிகர் விக்ரம், பிரியங்கா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது. இந்நிலையில் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பிரமோஷன்களை படக் குழுவினர் அடுத்தடுத்து திட்டமிட்டு வருகின்றனர். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கியுள்ள தங்கலான் படத்தில் கேஜிஎஃப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
மிரட்டலான லுக்கில் விக்ரம்: படத்தில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை ஒட்டிய கதைக்களத்தை பா ரஞ்சித் கையாண்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் வயதான மற்றும் இளைஞர் கேரக்டர்களில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் காணப்படுகிறார், இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மினுக்கி மினுக்கி வரும் என்ற பாடல் 17ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
தங்கலான் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: மேலும் இந்தப் பாடலின் பிரமோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த பர்ஸ்ட் சிங்கிளும் இந்த மொழிகளில் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த பிரோமோவில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரும் ஆட்டம் போடுவதாக காணப்படுகிறது. பழங்குடியினரை மையமாக வைத்து இந்த பாடல் உருவாகி உள்ளதாக ஜீவி பிரகாஷ் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வெறித்தனமான கெட்டப்: தங்கலான் படத்தில் வெறித்தனமாக தன்னுடைய கெட்டப்பை வெளிப்படுத்தி நடித்து முடித்துள்ள விக்ரம், அடுத்ததாக அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். தங்கலான் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், வீர தீர சூரன் படத்தின் சூட்டிங்கும் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படமும் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











