Thangalaan: தள்ளிப்போன தங்கலான் இந்தி பட ரிலீஸ்.. விஜய்யுடன் போட்டியிட தயாரான விக்ரம்!
மும்பை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி கடந்த 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியானது தங்களான் படம். பீரியட் படமாக உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. படம் இந்தியில் ரிலீசாகாத நிலையில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
படத்தின் இந்தி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதாக முன்னதாக விக்ரம் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த விஷயம் தன்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தற்போது அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தள்ளிப்போன இந்தி ரிலீஸ்: இந்நிலையில் ஹிந்தியில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி தங்கலான் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 6ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. படத்தின் கலெக்ஷன் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாயை நெருங்கி வரும் சூழலில் இந்தியிலும் இந்த படம் ரிலீசாகும் நிலையில் படத்தின் வசூல் மிக அதிக அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் ரிலீசிற்காக இந்தியில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருப்பதாக விக்ரமும் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த விஷயம் தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
செப்டம்பர் 6ம் தேதி ரிலீஸ்: இந்நிலையில் செப்டம்பர் 6ம் தேதி இந்த படம் ஹிந்தியில் ரிலீசாக உள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் சர்வதேச அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் விஜய்யின் கோட் படத்துடன் இந்தியில் தங்கலான் படமும் மோத உள்ளது. தங்கலான் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்தியிலும் மிகச் சிறப்பாக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய்க்கும் எப்போதுமே மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
விஜய்யுடன் மோதும் விக்ரம்: அந்த வகையில் இந்தியில் தங்கலான் மற்றும் கோட் படங்களுக்கு இடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் அடுத்தடுத்து கோட் படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே அடுத்ததாக 4வது சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











