Actor Vikram: வெல்ல வா வா.. ஆதியோனே.. வெளியானது தங்கலான் படத்தின் வார் பாடல்!
சென்னை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படம் சுதந்திரப் போராட்ட காலத்தையொட்டி கேஜிஎஃப் பகுதிகளில் தங்கத்தை கண்டுபிடிக்கும் பணிகளில் பிரிட்டீஷாருடன் இணைந்து செயலாற்றிய தமிழக மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோதனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் மினுக்கி மினுக்கி பாடலை தொடர்ந்து தற்போது அடுத்தப்பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த படம் ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பா ரஞ்சித் இயக்கத்தில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை ஒட்டிய கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தங்கலான் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புகளில் காணப்படுகிறார்.
இரண்டாவது பாடல்: இந்த படத்திற்காக மிகப்பெரிய மெனக்கெடல்களை விக்ரம் மேற்கொண்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. வெறுமனே பாதாம் பருப்புகளை மட்டுமே சாப்பிட்டு அவர் இந்த படத்திற்காக தன்னுடைய பிட்னஸை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ட்ரெயிலர், மினுக்கி மினுக்கி பாடல் ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் வார் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் லானே தங்கலானே என்ற இந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.
படத்தின் பிரமோஷன்கள்: இந்தப் பாடலின் இடையிடையில் படத்தின் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கி உள்ளது.இந்தப் பாடலை பாடகர் அறிவு எழுதியுள்ள நிலையில், அவருடன் இணைந்து ஜிவி பிரகாஷும் பாடியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தப் படத்திற்காக கேரளாவில் நடந்த பத்திரிகையாளர் சந்தில் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலே மக்கா என்று கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
ரசிகர்கள் உற்சாகம்: படத்தின் பிரமோஷன்களுக்காக தென்னிந்திய மாநிலங்கள், மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் படக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் அடுத்தடுத்து இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அடுத்ததாக இசை வெளியீடும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இந்தப் படத்தின் ரிலீஸ் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











