Thangalaan release: தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி.. மாலை வரை காத்திருங்க மக்களே!
சென்னை: நடிகர் விக்ரமின் தங்கலான் படம் பா ரஞ்சித் இயக்கத்தில் சிறப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக தங்கலான் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் மட்டுமில்லாமல் கேஜிஎப்பிலும் எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரமின் நடிப்பில் அடுத்தடுத்த சிறப்பான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என அடுத்தடுத்த சூப்பர்ஹிட் படங்களில் நடித்த விக்ரம் கோப்ரா என்ற படத்தையும் கொடுத்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனிடையே விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளது.
துருவ நட்சத்திரம் படம்: கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷ்ஷான ஜான் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விக்ரம். கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இடையில் இந்தப் படம் முடங்கியது. இதனிடையே, இந்தப் படத்தை கடந்த ஆண்டில் மீண்டும் தூசித்தட்டிய கௌதம் மேனன், அடுத்த மாதத்தில் ரிலீஸ் செய்யவுள்ளார். இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.
தங்கலான் படம்: இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இரட்டை கெட்டப்புகளில் நடித்துள்ள தங்கலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் விக்ரமுடன் இணைந்துள்ளனர்.

இருவேறு கெட்டப்புகள்: சுதந்திர போராட்ட காலத்தையொட்டி கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக தங்கான் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அந்த காலகட்டத்தையொட்டிய கெட்டப்பில் விக்ரம் காணப்படுகிறார். படத்தில் வயதானவர் மற்றும் இளைஞர் என இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இநத்ப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விக்ரமே அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி போஸ்டர் ஒன்றையும் தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே இந்த போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்ரமும் வெளியிட்டுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











