Actor Vikram: மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் தங்கலான்.. அட இதுதான் காரணமா?
சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். பா ரஞ்சித்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்தள்ளனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, கேஜிஎப் போன்ற இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரலுக்கு தள்ளிப் போனது.
ஏப்ரல் 11ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நாளிலும் படம் ரிலீசாகாது என்று கூறப்பட்டுள்ளது. படத்தில் முதியவர் மற்றும் இளைஞர் என இருவேறு கெட்டப்புகளில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ள நிலையில் முன்னதாக அவரது துருவ நட்சத்திரம் போலவே இந்தப் படத்தின் ரிலீசும் தொடர்ந்து தாமதமாவது விக்ரமின் ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. மல்ட்டி ஸ்டாரர் படமாக பொன்னியின் செல்வன் 2 படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்தது. விக்ரமின் கேரக்டரும் மிகச்சிறப்பாக அமைந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
பிரம்மாண்ட தயாரிப்பு: முன்னதாக ஜனவரி 26ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போனது. ஏப்ரல் 11ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்டக் காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தில் முதியவர் மற்றும் இளைஞர் என இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டின.
ரிலீஸ் தள்ளிப்போகும் தங்கலான்: இந்நிலையில் படம் ஏப்ரல் மாதத்திலும் ரிலீசாகாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி படத்தின் ரிலீசை மேலும் தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தலை அடுத்து படம் ரிலீசானால் மக்களின் கவனம் முழுவதும் இந்தப் படத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிப் போவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருவ நட்சத்திரம் வழியில் தங்கலான்: முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிப் போகும் நிலையில் தற்போது அவரது அடுத்தப்படமான தங்கலான் படமும் அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிப் போவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னதாக படத்தின் மேக்கிங் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி படத்திற்காக படக்குழுவினரின் உழைப்பை வெளிப்படுத்தியது. இந்நிலையில் படம் விரைவில் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications