Vikram: தங்கலான் சூட்டிங்கை நிறைவு செய்த விக்ரம்.. அப்ப அடுத்தப்படம்?
சென்னை: நடிகர் சியான் விக்ரம் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் தங்கலான். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகவுள்ள படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.
இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை கேஜிஎப் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு தற்போது சூட்டிங் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. விக்ரம் தனது போர்ஷனை படத்தில் நிறைவு செய்துள்ளார்.
படத்தில் மேலும் சில பேட்ச் வேலைகள் மீதமுள்ளதாகவும் அதற்கான வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கினற்ன.
நடிகர் விக்ரமின் தங்கலான் சூட்டிங் நிறைவு -அடுத்தப்படம் குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி, பிரிட்டீஷ் நடிகர் டேனியல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது தங்கலான். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. மேலும் கேஜிஎப் பகுதிகளில் 50 நாட்களை கடந்து சூட்டிங் நடத்தப்பட்டது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார்.
தான் ஏற்கும் கேரக்டர்களுக்காக எப்போதுமே விக்ரம் அதிகமான மெனக்கெடுவார். அதேபோல சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள தங்கலான படத்தில் விக்ரம் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். வயதான மற்றும் 30 வயது இளைஞர் என அவர் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். இதற்காக நீண்ட தலைமுடி, தாடி என தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களாக இந்த கெட்டப்பில் விக்ரமை பார்க்க முடிந்தது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன்களின்போதும் அவரை இந்த கெட்டப்பில் பார்க்க முடிந்தது. இதையே ஸ்டைலாக மாற்றிக் காட்டினார் விக்ரம். அவரது அழகான கொண்டை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வித்தியாசமான கோட் சூட்டுடன், அழகான கொண்டையுடன் அவர் காணப்பட்டது ட்ரெண்டானது. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ள விக்ரம், தன்னுடைய பழைய கெட்டப்பிற்கு மாறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்து விக்ரம் அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை அவரது அடுத்தப்படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்கலான் என அடுத்தடுத்த பிரம்மாண்டமான படைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்ட விக்ரம், அடுத்ததாக தனக்கான இடைவெளியை எடுத்துக் கொண்டு, சிறப்பான படத்தை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான மணிரத்னத்தின் பொன்னயின் செல்வன் 2 படத்தில் விக்ரம் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். நந்தினியுடனான காதலையும் இளவரசனுக்குரிய கம்பீரத்தையும் அவரிடம் பார்க்க முடிந்தது. இந்தப் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. அதேபோல அவரது அடுத்தப்படமான தங்கலான் படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததையொட்டி நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். முதல் நாளின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதிநாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில், 118 நாட்கள் மொத்தமாக இந்த புகைப்படங்களுக்கு இடையில் தான் டீமுடன் இணைந்து வேலை பார்த்ததாகவும் இந்த கனவில் தங்களை வாழ செய்த பா ரஞ்சித்திற்கு நன்றி என்றும் அவர் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











