Vikram: நீண்ட காலங்களுக்கு பிறகு பாடல் பாடிய விக்ரம்.. வெளியானது தங்கலான் படத்தின் அறுவடை பாடல்!
சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை பீரியட் படமாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை மையமாகக் கொண்டு தங்கலான் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் தற்போது படத்தின் 3வது சிங்கிள் வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது.

தங்கலான் படம்: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ள தங்கலான் படத்தில் மிரட்டலான இரு வேறு தோற்றங்களில் விக்ரம் காணப்படுகிறார். இந்தப்படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் விக்ரம் பங்கேற்று வருகிறார். தான் முன்னதாக தில், சாமி போன்ற படங்களில் நடித்துள்ளதாகவும் ஆனால் கமர்ஷியல் படங்களை தாண்டி வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து வருவதாகவும் அதன் வெளிப்பாடுதான் தங்கலான் என்றும் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பீரியட் படம்: தந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை மையமாகக் கொண்டு தங்கலான் படம் உருவாகியுள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். பீரியட் படமாக தங்கலான் உருவாகியுள்ள நிலையில் முன்னதாக யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படங்களுக்கும் தங்கலான் படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் ரஞ்சித் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டிலேயே தங்கலான் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது.
3வது சிங்கிள் ரிலீஸ்: தங்கலான் படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளது. படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பழங்குடியினரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் தான் பிரத்யேகமாக இசையமைத்துள்ளதாக முன்னதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார். படத்தின் அடுத்தடுத்து மினுக்கி மினுக்கி மற்றும் தங்கலானே பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் தற்போது படத்தின் மூன்றாவது பாடல் வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது.
பாடலை பாடிய விக்ரம்: இந்த பாடலை விக்ரம் சிந்தூரி விஷால், மதிச்சயம் பாலா, சுகந்தி உள்ளிட்ட பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலின் துவக்கத்தில் சியான் பாடியுள்ள நிலையில், அறுவடை பாடலை அவர் தனது வாய்சால் சிறப்பாக்கியுள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் இந்த படத்தின் மூலம் பாடல் பாடியுள்ளார். அறுவடை காலத்தை மையமாக வைத்து இந்த பாடல் உருவாகியுள்ளது. அறுவடை காலங்களின் போது பாடல்கள் பாடியவாறு அதை மேற்கொள்ளும் வழக்கம் தமிழர்களிடையே காலங்காலமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த பாடல் ரசிகர்களை இசை மூலமாகவும் காட்சி அமைப்புகளின் மூலமாகவும் வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











