ஆசைகளும் கனவுகளும் தங்கச்சுரங்கங்களைவிட ஆழமாக பயணிக்கும்போது.. தங்கலான் ட்ரெயிலருக்கு ரெடியா மக்களே!

சென்னை: நடிகர் விக்ரம் பொன்னின் செல்வன் 2 படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கேஜிஎஃப் மக்களின் வாழ்க்கையை கூறும் படமாக தங்கலான் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்புத் தரப்பு அடுத்தடுத்த ப்ரமோக்களை வெளியிட்டு வருகிறது.

Vikram Pa Ranjith tamil cinema

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருபவர். தான் ஏற்கும் கேரக்டர்களை அழகாகவும் சிறப்பாகவும் ஆக்குவதில் இவரை மிஞ்சுவதற்கு கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் ஆட்கள் குறைவுதான். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் மல்ட்டி ஸ்டார் படமாக இருந்த போதிலும் விக்ரம் நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலரும் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தனர்.

தங்கலான் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்த படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் கதைகளத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் இரு வேறு கெட்டபுகளில் விக்ரம் காணப்படுகிறார். அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட காலங்களாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் திணறி வந்த நிலையில் அடுத்த மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

தங்கலான் ட்ரெயிலர்: இதனிடையே, நாளைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள தங்களான் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதனிடையே, ட்ரெய்லர் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகளை அந்நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது விக்ரம் போஸ்டருடன் கூடிய புதிய அறிவிப்பையும் தயாரிப்பு தரப்பு instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நம்முடைய ஆசைகளும் கனவுகளும் தங்கச்சுரங்கங்களை காட்டிலும் ஆழமாக போகும் நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அழுத்தமான கேரக்டர்கள்: சுதந்திரப் போராட்ட காலகட்டத்தையொட்டி உருவாகியுள்ள தங்கலான் படம் அக்காலத்திய மக்களை நம் கண் முன்னே கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம். கோலார் தங்க வயலில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான தமிழ் மக்களின் வாழ்க்கையை இந்த படம் கூறுவதாக அமைந்துள்ள நிலையில், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்களுக்கும் இந்த படத்தில் மிக அழுத்தமான கேரக்டர்களை பா ரஞ்சித் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில் தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் படமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் அவர்கள் காத்திருப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X