சியான் ரசிகர்களே ரெடியா?.. விக்ரமின் வீர தீர சூரன் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?.. நாளை நல்ல வேட்டை!
சென்னை: நடிகர் விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில் தங்கலான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் வீர தீர சூரன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் படம் பொங்கல் ரேஸில் இணையவில்லை.
அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இநத்ப் படத்தில் விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியான நிலையில் நாளைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்களை தொடர்ந்து அடுத்ததாக கடந்த ஆண்டில் விக்ரம், பார்வதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் வெளியானது. விக்ரம் இரட்டை கெட்டப்புகளில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படம் வசூலில் சிறப்பாக அமைந்தது. சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்த நிலையில், அந்த காலகட்ட மக்களின் வாழ்க்கையை கூறும் வகையில் இந்தப் படம் அமைந்திருந்தது.
வீர தீர சூரன் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண்குமார் இயக்கத்தில் சியான் இணைந்துள்ள படம் வீர தீர சூரன். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரிலீசாகவுள்ளதாகவும் முதல் பாகம் அடுத்ததாக உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமின் 62வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் விக்ரமின் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக படத்தின் டீசர், போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு செய்துள்ளது.
நாளை பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: முன்னதாக அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா படம் மிகப்பெரிய கவனத்தை பெற்ற நிலையில், வீர தீர சூரன் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ரியா ஷிபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தில் காளி என்ற கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் முன்னதாக பொங்கலையொட்டி திட்டமிடப்பட்ட நிலையில், பொங்கல் ரேஸிலிருந்து படம் பின்வாங்கியது.
ரிலீஸ் அப்டேட்: இதையடுத்து படம் வரும் ஜனவரி 30 அல்லது 31ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இயக்குநர் அருண்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தன்னுடைய படங்களில் அழுத்தமான கதைக்களத்தை கொடுத்துவரும் அருண்குமார், இந்தப் படத்திலும் அதையே மேற்கொண்டுள்ளார். டீசர் உள்ளிட்டவற்றின்மூலம் இதை அறிய முடிகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











