Actor Vikram: தென்காசியில் துவங்கிய சூட்டிங்.. வீர தீர சூரன் படத்தின் க்யூட் புகைப்படம்!
தென்காசி: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்று தந்தது, இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு தயாராகி ஆனால் ரிலீசாக முடியாமல் தவித்து வருகிறது. இந்தப் படங்களின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் தற்போது நடிக்க துவங்கியுள்ளார் விக்ரம். நேற்றைய தினம் தென்காசியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள சூழலில் படக் குழுவினர் விக்ரம் -துஷாரா இணைந்துள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் இருவரும் இரு சக்கர வானத்தில் பயணிப்பதாக காணப்படுகிறது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ள படம் வீர தீர சூரன். சேதுபதி, சித்தா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார், விக்ரமின் 62வது படமான வீர தீர சூரன் படத்தை இயக்கி வருகிறார். படத்தை ஹெச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட்டாகியுள்ளார். பொன்னியின் செல்வன் 2 படத்தின் வரவேற்பிற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

வீர தீர சூரன் படம்: இந்நிலையில் இந்தப் படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. முன்னதாக இந்த படங்கள் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் அடுத்ததாக வீர தீர சூரன் படத்தின் ஷூட்டிங்கிற்காக தென்காசியில் முகாமிட்டுள்ளார் விக்ரம். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் முதலில் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளதாகவும் தொடர்ந்து படத்தின் பிரிக்குவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் பிரமோ கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தென்காசியில் துவங்கிய சூட்டிங்: ந்த டைட்டில் டீசரை 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் துவங்கியுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையொட்டி படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் மிகவும் அன்னியோன்யமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதாக இந்த போஸ்டரில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த போஸ்டரை தனது எக்ஸ தள பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் விக்ரம், சம்பவம் லோடிங் என்று பதிவிட்டுள்ளார்.
மூன்று வேடங்களில் விக்ரம்: இந்த படத்தில் நடிகர் விக்ரம் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் மிகப் பெரிய மாஸ் ஆக்சன் கதைக்களத்தில் படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சாமானிய மனிதனை வெளிப்படுத்தும் லுக்கில் விக்ரம் காணப்படுகிறார். ஆயினும் அவரது நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக காணப்படுவதாக படத்தின் டைட்டில் டீசரில் காணப்பட்டது. சாதாரண மளிகைக்கடை நடத்திவரும் விக்ரம், தன்னுடைய எதிரிகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதாக டீசரில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











