SJ Surya: எஸ்ஜே சூர்யா பிறந்தநாளுக்கு போஸ்டருடன் வாழ்த்து சொன்ன வீர தீர சூரன் டீம்.. போஸ்டர் மிரட்டுதே!
சென்னை: நடிகர் விக்ரம், துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் வீர தீர சூரன். இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் வில்லனாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள படக்குழுவினர் அவரது மிரட்டலான போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக மிரட்டலான லுக்கில் எஸ்ஜே சூர்யா காணப்படுகிறார். முன்னதாக படத்தின் டைட்டில் பிரமோ உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படம் விரைவில் சூட்டிங்கை நிறைவு செய்ய உள்ளது.

வீர தீர சூரன் படம்: நடிகர் விக்ரம், துஷாரா விஜயன், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் வீரதீர சூரன் படத்தை இயக்குநர் அருண்குமார் இயக்கி வருகிறார். விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் டைட்டில் பிரமோ முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முன்னதாக சித்தா என்ற படத்தை கொடுத்த அருண்குமார் இந்தப் படத்தில் எந்தமாதிரியான கதைக்களத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
2வது பாகமாக உருவாகும் படம்: படத்தை எச்ஆர் பிக்சர்ஸ் ரியா ஷிபு தயாரித்து வருகிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் பிரமோ வெளியான நிலையில், நடிகர் விக்ரமின் பிறந்தநாள் சிறப்பு வீடியோவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது. படத்தில் விக்ரமின் லுக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இந்தப் படம் இரண்டாவது பாகமாக உருவாகி வருவதாகவும் படத்தின் முதல் பாகம் அடுத்ததாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எஸ்ஜே சூர்யா பிறந்தநாள் சிறப்பு போஸ்டர்: இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா முக்கியமான மற்றும் அழுத்தமான கேரக்டரில் நடித்து வருகிறார். படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் சூழலில் இன்றைய தினம் எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். மேலும் எஸ்ஜே சூர்யாவின் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் போலீஸ் அதிகாரியாக மிகவும் தீர்க்கமான பார்வையுடனான எஸ்ஜே சூர்யாவை பார்க்க முடிகிறது. விக்ரமின் 62வது படமாக உருவாகி வருகிறது வீர தீர சூரன் படம். படத்தில் காளி என்ற கேங்ஸ்டராக கிராமத்து கெட்டப்பில் விக்ரம் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. அடுத்ததாக அவரது நடிப்பில் ராயன், சூர்யாவின் சனிக்கிழமை, இந்தியன் 3, வீர தீர சூரன், குட் பேட் அக்லி, எல்ஐசி, சர்தார் 2, எஸ்கே24, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இயக்குநராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது நடிகராக அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் எஸ்ஜே சூர்யா, விரைவில் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக கார் ஒன்றையும் அவர் சொந்தமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











