Vikram: ஜனவரி ரிலீசுக்கு தயாராகும் வீர தீர சூரன்.. காளியின் அதிரடி ஆட்டத்தை காட்டும் டீசர்!
சென்னை: நடிகர் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே. சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தை இயக்கியுள்ளார் சித்தா பட புகழ் இயக்குநர் அருண்குமார். இந்த படம் வரும் ஜனவரி மாத வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்றைய தினம் அதை வீர தீர சூரன் பட டீம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதிரடியாக அமைந்துள்ள இந்த டீசரில் விக்ரம் மற்றும் எஸ்ஜே சூர்யா காம்பினேஷன் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளன. படத்தில் விக்ரமின் அழகான சைடாக துஷாரா விஜயனுடனான அவரது ரொமான்ஸ் பக்கங்கள் காட்டப்பட்டுள்ளன.

வீர தீர சூரன் படம்: நடிகர் சியான் விக்ரமின் தங்கலான் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் ரசிகர்களை பலவிதங்களில் கவர்ந்த நிலையிலும் படம் வசூல்ரீதியாக சிறப்பாக அமையவில்லை. படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்த நிலையில், ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பான கவனத்தை பெற்றன. இந்நிலையில் அடுத்ததாக சித்தா படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் இணைந்துள்ளார் விக்ரம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
வீர தீர சூரன் பட டீசர்: வீர தீர சூரன் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் இணைந்துள்ள நிலையில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் காளி என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். இந்த படம் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள நிலையில் படத்தின் பிரிக்குவல் அடுத்ததாக உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில் இன்றைய தினம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே படம் ரிலீசாகவுள்ளதாக இந்த டீசரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படம் குடியரசு தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மிரட்டலான டீசர்: இன்றைய தினம் வெளியாகியுள்ள அதிரடியான டீசரில் திருவிழாவை ஒட்டிய காட்சிகள் காணப்படுகின்றன. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவரது காட்சிகள் இந்த டீசரில் விக்ரமிற்கு இணையாக அமைந்துள்ளது. படம் விக்ரமின் கேரியர் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் மேலும் சுராஜ் வெஞ்சாரமுடு, சித்திக் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பின்னணியிலும் பாடல்களிலும் அவர மிரட்டலான இசையை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
விக்ரம் -அருண்குமார் காம்பினேஷன்: படத்தை எஸ்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா சுபு தயாரித்துள்ள நிலையில் படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீக்குவல் படத்தின் ரிலீசை தொடர்ந்து துவங்கவுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், அதிகமான திரையரங்குகளில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சேதுபதி, சித்தா படங்கள் மூலம் அதிகமான கவனத்தை பெற்ற இயக்குநர் அருண்குமாருடன் நடிப்பு அசுரனும் இணைந்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











