விக்ராந்த்க்கு இன்று பிறந்தநாள்... வாழ்த்துக் கூறி கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை : தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் விக்ராந்த் இப்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்து தனித்துவமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான பக்ரீத் திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்னை வெளிப்படுத்திய விக்ராந்துக்கு பாராட்டுகளும் விருதுகளும் வழங்கப்பட்டது.

இவ்வாறு படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடித்து வரும் விக்ராந்த் நவம்பர் 13 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

நடிகர் விஜய்யை தொடர்ந்து விக்ராந்த் ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் அதன்பின் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக உதயமானார்.

பெண்களுக்கு பிடித்த

பெண்களுக்கு பிடித்த

பார்க்க அப்படியே தனது அண்ணன் விஜய் போலவே ஒரு சாயலில் இருப்பதால் முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த விக்ராந்த் அதைத்தொடர்ந்து பல காதல் திரைப்படங்களில் நடித்து பெண்களுக்கு பிடித்த நடிகராக வலம் வந்தார்.

நெகட்டிவ் கதாபாத்திரத்தில்

நெகட்டிவ் கதாபாத்திரத்தில்

ஒரு கட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் சுமாரான வெற்றி மற்றும் தோல்வியை மட்டுமே தழுவி வந்த நிலையில், டிராக்கை மாற்றி அமைக்க நினைத்த விக்ராந்த் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

போராடிக் கொண்டிருக்கிறார்

போராடிக் கொண்டிருக்கிறார்

மதுரை மண் வாசனையுடன் கிராமத்து கதைக்களத்தை கொண்டு உருவான கோரிப்பாளையம் மற்றும் முத்துக்கு முத்தாக உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்திருந்த விக்ராந்த் இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு

விஷால், சுசீந்திரன் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற பாண்டிய நாடு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற விக்ராந்த் அதைத் தொடர்ந்து கவண், கெத்து உள்ளிட்ட திரைப்படங்களில் கவனிக்கக் கூடிய முக்கியமான கதாபாத்திரங்களில் வந்து சென்றார்.

சிறந்த படைப்புகளை எதிர்பார்த்து

சிறந்த படைப்புகளை எதிர்பார்த்து

மேலும் சமீபத்தில் மென்மையான கதைக்களத்தை கொண்டு வெளியான பக்ரீத் திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு பெயரையும் புகழையும் விருதுகளையும் பெற்றுத் தந்த நிலையில், அதே போன்ற சிறந்த படைப்புகளை ரசிகர்கள் இவரிடமிருந்து எதிர்பார்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X