SK23 movie: சிவகார்த்திகேயனுடன் இணைந்த லால் சலாம் ஹீரோ.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஸ்கே23 டீம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல கன்னட பட நடிகை ருக்மிணி வசந்த இணைந்துள்ளார்.
அடுத்ததாக சல்மான் நடிப்பில் பாலிவுட் படத்தையும் ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார். இதற்கான பூஜை விரைவில் போடப்பட உள்ள நிலையில், இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயன் படத்தையும் ஒரே நேரத்தில் ஏஆர் முருகதாஸ் மாற்றி மாற்றி இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்தின் தர்பார் படத்தை தொடர்ந்து சில காலங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை எஸ்கே23 படத்திற்காக இயக்கி வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்து நடித்து வருகிறார். படத்தில் முன்னணி வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்துவரும் சூழலில் இந்த படத்தில் மற்றொரு இணைப்பாக தற்போது முக்கியமான நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தெரிகிறது.
SK23 படத்தில் இணைந்த விக்ராந்த்: நடிகர் விக்ராந்த் இந்த படத்தின் லீட் கேரக்டரில் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் தற்போது அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சமீபத்தில் விக்ராந்த் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் கேரக்டர்கள் இந்தப் படத்தில் கவனம் பெற்றிருந்தன. கோலிவுட்டில் ஹீரோவாகவே அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். இடையில் விக்ராந்திற்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கியமான கேரக்டர்களில் இவர் நடித்து வருகிறார்.
லால் சலாம் படம்: அந்த வகையில் லால் சலாம் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தில் விக்ராந்த் தற்போது இணைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனனும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்த படங்கள்: இந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் அமரன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ள சூழலில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 27ம் தேதி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











