விஜய் மகனுக்கு எல்லாமே தாமதமாகத்தான் நடக்குமா?.. சித்தப்பா விக்ராந்த் ஒரு விஷயத்தை ஓபன் செஞ்சிருக்காரு
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தை போல் நடிக்கமால் தனது தாத்தா வழியில் இயக்குநராகியிருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் அப்படத்துக்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து ஒருவழியாக முடியும் தருவாய்க்கு வந்திருக்கிறது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் ஜேசன் குறித்து அவரது சித்தப்பா விக்ராந்த் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தளபதி விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படங்களின் பாடல்களில் சில நொடிகள் தலை காண்பித்தார். எனவே அவரும் தந்தை போன்றே நடிக்கப்போகிறார் என கருதப்பட்டது. அதற்கு பிறகு கேமரா முன்பே வராமல் இருந்த அவர் வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். இயக்கம் தொடர்பான படிப்பை படித்த அவர் அங்கேயே ஒரு குறும்படத்தையும் இயக்கி அனுபவத்தை கற்றுக்கொண்டார்.
இயக்குநராக அறிமுகம்: குறும்படத்தை இயக்கிய அனுபவத்தை வைத்துக்கொண்டு முழு நீள படத்துக்கான கதையையும் எழுதி லைகாவை தயாரிக்கவும் சம்மதிக்க வைத்துவிட்டார். லைகா உள்ளே வந்ததற்கு சங்கீதாவும், சங்கீதாவின் தந்தையும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தில் ஹீரோவாக சந்திப் கிஷன் கமிட்டாகியிருக்கிறார். மேலும் தம்பி ராமைய்யா போன்றோரும் நடிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்துவருகிறது. தமன் இசையமைக்கிறார். படத்தின் பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்புதான் சிக்மா என்று பெயர் அறிவிக்கப்பட்டது. ஷூட்டிங்கும் இப்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும்; விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
விக்ராந்த் பேட்டி: இந்நிலையில் அவரது சித்தப்பாவும், நடிகருமான விக்ராந்த் சமீபத்திய பேட்டியில் ஜேசன் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ஜேசனிடம் எனக்கு ரொம்ப பிடித்ததே அவருக்கு இயக்கம் பிடிக்கும் என்பதுதான். அவ்வளவு இடத்திலிருந்து அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தன.அது எனக்கே தெரியும். எதிர்காலத்தில் அவர் நடிக்கக்கூட செய்யலாம். ஆனால் இயக்குநர்தான் ஆவேன் என்று உறுதியாக நின்றார்.
பெரிய இயக்குநர்களே செய்வார்கள்: அவரது தந்தை எவ்வளவு பெரிய ஸ்டார். உள்ளே வந்து நடிக்க ஆரம்பித்தார் என்றால் அவரை வைத்து பெரிய இயக்குநர்களே படம் செய்வார்கள். அவரும் வென்றுவிடலாம். ஆனால் அதையெல்லாம் மீறி தனக்கு பிடித்த விஷயத்தை செய்துகொண்டிருக்கிறார். அதில் சாதிக்க வேண்டும், தந்தையின் நிழல் இல்லாமல் தனியாகவே வெல்ல வேண்டும் என்று இந்த வயதில் செயல்படுவது பெரிய விஷயம். அவர் ரொம்ப நல்லவர். அமைதியாக இருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











