Soori: சூரி நடிகர் மட்டுமில்ல.. இயக்குநரும்தான்.. பல ஸ்கிரிப்ட் வச்சிருக்காரு - பிரபல நடிகர் ஓபன்

சென்னை: சினிமாவில் மிகவும் தீவிரமாக உழைத்தால் சினிமா கைவிடாது என்பதற்கு சூரி சரியான உதாரணம் எனக் கூறலாம். அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து தற்போது 100 கோடி வசூலை நோக்கி நகரும் கதாநாயகனாக வளர்ந்து வருகின்றார். நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, இப்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் கடந்த 23ஆம் தேதி கொட்டுக்காளி என்ற படம் வெளியாகி ஓடிக்கொண்டு உள்ளது. இந்நிலையில், அதேநாளில் ரிலீஸ் ஆன போகுமிடம் வெகுதூரமில்லை படத்தின் நாயகன் விமல், சூரி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த 23ஆம் தேதி தமிழ் சினிமாவில் பல படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் மிகவும் கவனிக்கப்பட்ட படங்கள் என்றால், வாழை மற்றும் கொட்டுக்காளி படங்கள்தான். இந்தப் படங்களை அடுத்து பலரது கவனத்தை ஈர்த்தப் படம் என்றால் அது நடிகர் விமல் மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள, போகுமிடம் வெகுதூரமில்லை படம்தான். இந்தப் படக்குழுவினர் தனியார் யூடுயூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர். அப்போது படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Vimal Soori Kottukkaali

போகுமிடம் வெகுதூரமில்லை படம் என்பது இருவருக்குள் நடைபெறும் உரையாடல்தான். சென்னையைச் சேர்ந்தவரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும் ஒன்றாக பயணிக்கும்போது அவர்கள் பேசிக்கொள்வதுதான் படத்தின் கதை. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு கிடைத்து வருகின்றது.

ஸ்கிரிப்ட்: இந்நிலையில், அந்த பேட்டியில் பேசுகையில் நடிகர் விமல் தனது அடுத்த படமான தேசிங்கு ராஜா 2 படம் குறித்து பேசினார். தேசிங்கு ராஜா படத்தில் சூரி இருந்ததால், தேசிங்கு ராஜா 2 படத்தில் சூரி இருப்பாரா என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு விமல், “ இந்தப் படத்தில் சூரி இல்லை. குக் வித் கோமாளியில் வரும் புகழ் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர்” எனக் கூறினார். மேலும், சூரியின் வளர்ச்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

வளர்ச்சி: அதற்கு, “ சூரியின் இந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் திறமையான நடிகர். இது மட்டும் இல்லாமல், அவரிடமே பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் உள்ளது. அவரது திறமை குறித்து எனக்கு முன்பே தெரியும். இதனால் சூரியி வளர்ச்சி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அவர் இன்னும் உயரத்திற்குச் செல்வார்” எனக் கூறினார்.

படங்கள்: நடிகர் விமல் மற்றும் சூரி இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். சூரி முதன் முதலில் வெற்றி மாறனின் விடுதலை பாகம் 1 படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் கருடன் படத்தில் கதையின் நாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது இவரது நடிப்பில் கொட்டுக்காளி படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X