பொள்ளாச்சி கொடூரம்: 'ப்ளீஸ்... முகம் தெரியாதவனை நம்பாதீங்க'... நடிகர் விமல் வேண்டுகோள்!
பொள்ளாச்சி விவகாரத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விமல் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை: முகம் தெரியாதவர்களை நம்ப வேணடாம் என பெண்களுக்கு நடிகர் விமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில் காமக்கொடூரன்களின் வெறிக்கு இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் விமல் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

பொள்ளாச்சி சம்பவம்
"இப்போது நாட்டு மக்களின் கோபத்தை மிகப்பெரிய அளவில் தூண்டியுள்ள பொள்ளாச்சி சம்பவத்திற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் அலறல் குரலை கேட்கும்போது என் அக்காவும் தங்கச்சியும் அலறுவது போன்ற எனக்கு கேட்கிறது.

முகம் தெரியாத ஆண்கள்
தமிழ��்கள் எல்லோரும் மற்ற பெண்களை அக்கா தங்கையாகத்தான் பார்க்கிறோம். நேரில் பார்த்து பழகிய ஆண்களையே நம்பமுடியாத காலம் இது. சோசியல் மீடியாவை பெண்கள் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது.

விழிப்புடன் இருக்க வேண்டும்
இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் வாட்ஸ் அப்பில் பழக்கமான ஒருவரையெல்லாம் நல்லவன் என நம்பிவிடமுடியாது. அந்த விஷயத்தில் நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெரியவர்களும் இந்த வயதில் யாரை நம்பலாம் நம்பக் கூடாது என இளைஞர்களுக்கு ஒரு அறிவுரை மாதிரி இல்லாமல் ஒரு நண்பனாக அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை
அதே சமயம் இது போன்ற கொடிய குற்றத்தில் ஈடுபட்ட அந்த மிருகங்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்று தனது ���ோபத்தையும் குமுறலையும் வெளிபடுத்தினார்.


Click it and Unblock the Notifications