twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமல் நடிக்கும் “தெய்வ மச்சான்“... என்னடா இது… இப்படி ஒரு டைட்டிலா?...

    |

    சென்னை : நடிகர் விமல் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    நடிகர் விமல், கில்லி, குருவி, கிரீடம், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர், பாண்டியராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் அறிவழகன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் விமலுக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

    களவாணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, தேசிங்குராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். சமீபத்தில், விலங்கு என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

    Actor Vimal new movie deiva machan first look out

    இந்நிலையில், நடிகர் விமல் நடிக்கும் தெய்வ மச்சான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அனிதா சம்பத் விமலின் தங்கையாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் பாண்டியராஜ் விமலுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களை தவிர ஆடுகளம் நரேன், நடிகை தீபா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    டிரெண்டிங்கில் கலக்கும் சூர்யா 41...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...என்ன காரணம் தெரியுமா? டிரெண்டிங்கில் கலக்கும் சூர்யா 41...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...என்ன காரணம் தெரியுமா?

    Recommended Video

    Vilangu | Vimal Exclusive | Beast படம் வெறித்தனமா Waiting | Filmibeat Tamil

    இப்படத்திற்கு கேமில்.ஜே.அலெக்ஸ் ஒளிப்பதிவில் குட்வின்.ஜே.கோடன் இசை அமைக்கிறார். உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் தெய்வ மச்சான் படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின், தலைப்பு வித்தியாசமாக உள்ளதால் ரசிகர்கள் என்னடா இது...இப்படி ஒரு டைட்டிலா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

    English summary
    Actor Vimal new movie deiva machan first look out
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X