என்னை அடிமையா வச்சிருந்தப்போ மிரட்டி வாங்கிய ஆடியோ அது.. நடிகர் விமல் பரபரப்பு விளக்கம்!
சென்னை: தயாரிப்பாளர்கள் கோபி மற்றும் சிங்காரவேலனுக்கு உரிய பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன் என நடிகர் விமல் பேசிய ஆடியோ நேற்று வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த ஆடியோ புது ஆடியோ இல்லை என்றும் 2019ம் ஆண்டு அவர்களின் அடிமையாக இருந்த போது நான் பேசிய ஆடியோ என நடிகர் விமல் பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளார்.
பண மோசடி விவகாரம் தொடர்பாக பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார் நடிகர் விமல்.

5 கோடி தரணும்
மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக தன்னிடம் வாங்கிய 5 கோடி ரூபாயை நடிகர் விமல் தராமல் ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் கோபி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால், தான் எந்த பணமும் வாங்கவில்லை என நடிகர் விமல் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிங்காரவேலன் எனும் தயாரிப்பாளர் ஒருவரும் விமல் மீது புகார் அளித்துள்ளார்.

மோசடி மன்னன்
நடிகர் விமல் ஒரு மோசடி மன்னன் என்றும் தன்னிடம் வாங்கிய ஒன்றரை கோடி பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்ட நிலையில், விமல் கொடுத்த செக் பவுன்ஸ் ஆன வழக்கும் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளார்.

விமல் ஆடியோ
இந்நிலையில், நேற்று தயாரிப்பாளர்கள் கோபி மற்றும் சிங்காரவேலனிடம் நடிகர் விமல் மன்னிப்பு கேட்டு வெளியிட்டதை போன்ற ஆடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அந்த ஆடியோவில் இருவருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் 6 மாதத்திற்குள் தந்து விடுகிறேன் என நடிகர் விமல் உறுதி அளித்திருந்தார்.

விமல் விளக்கம்
இந்நிலையில், அந்த ஆடியோ புதிய ஆடியோ இல்லை என்றும் கடந்த 2019ம் ஆண்டு தான் பேசிய ஆடியோ தான் என்றும் அதனை புதிது போல சித்தரித்து இருவரும் வெளியிட்டு மோசடி செய்கின்றனர் என பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். மேலும், அந்த ஆடியோவில் இருவருக்கும் பணம் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது குறித்து கேள்வி எழாமல் இருக்க அதற்கான பதிலையும் இந்த புதிய ஆடியோவில் விமல் அளித்துள்ளார்.

அடிமையாக இருந்த போது
என்னை மிரட்டி அந்த ஆடியோவை பேச வைத்தனர் என்றும், அவர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் அப்படி பேசி இருந்தேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, இதற்கும் மேல், அவர்கள் செய்யும் சூழ்ச்சிக்கு அடிபணிந்து போக மாட்டேன் எனவும் சட்டப்படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றும் நடிகர் விமல் புதிய ஆடியோவில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











