லண்டன் போலீசாரிடம் சிக்கி திணறிய ரஜினி ஹீரோயின்.. சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய விமல்!
லண்டன்: லண்டன் போலீசாரிடம் சிக்கி தவித்த பிரபல நடிகையை நடிகர் விமல் சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் மை பாஸ். இந்த படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் தற்போது தமிழில் சண்டகாரி தி பாஸ் என உருவாகி வருகிறது. இதில் நடிகர் விமல், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு
இந்தப் படத்தை மதுர, மிரட்டல், மோகினி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆர் மாதேஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

குடியுரிமை பகுதி
இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டியதாக தெரிகிறது.

சுற்று வளைத்த போலீசார்
இதனால் அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள் என்று போலீசார் அவரிடம் துருவி துருவி கேள்வி எழுப்பியுள்ளனர்.

காப்பாற்றிய விமல்
அப்போது அந்த இடத்திற்கு வந்த நடிகர் விமல் அவரிடம் உள்ள ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து எதற்காக வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரேயாவை விடுவித்தனர்.

கவர்ச்சி போட்டோக்கள்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஷ்ரேயா திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர விரும்பிய அவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











