தேர்தலில் போட்டியிட விரும்பும் பிரபல நடிகரின் மனைவி.. விருப்பமனு தாக்கல்..எந்தக் கட்சின்னு பாருங்க!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பிரபல நடிகரின் மனைவி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழில் பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் விமல். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து களவானி, தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் விமல்.

லாக்டவுன் நேரத்தில் உதவி
கடைசியாக அவரது நடிப்பில் கன்னி ராசி படம் வெளியானது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை பூர்விகமாக கொண்ட நடிகர் விமல் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது பகுதியில் கிருமி நாசினி அடிப்பது, ஏழை மக்களுக்கு உதவுவது என இருந்தார்.

போட்டியிட விருப்பம்
இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விருப்ப மனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் விமலின் மனைவி அக்ஷ்யாவும் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினிடம்
மருத்துவரான அக்ஷயா, திமுக சார்பில் சட்ட சபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர்.

வைரல் போட்டோ
அவருக்கு கட்சி சார்பில் சீட் ஒதுக்கப்படுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும். விமலும் அக்ஷயாவும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுக்களை அளித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











