சிவகார்த்திகேயனுடன் இணையும் வினய்!

சென்னை : சிவகார்த்திகேயனின் ஹீரோ பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும் சிவகார்த்திகேயனும் இனைந்து டாக்டர் என்ற படத்தை தயாரிக்க உள்ளனர் .

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயனாக நடிக்கிறார் .இந்த படத்தின் அதிகாரபூர்வ முதல் பார்வை சில நாட்களுக்கு முன் வெளியிட பட்டது ,இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் . படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் .

actor vinay joins with shivakarthikeyan

தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார் .இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது .இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார் .இந்த படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஆக்சன் கிங் அர்ஜீன் ,அபய் தியால்,இவானா ,கல்யானி ப்ரியதர்ஷன் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் .படத்தின் முன்னோட்டம் மற்றும் ஒரு பாடல் இதுவரை வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக கனா ,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய இரு படங்களை தயாரித்து இருந்தார் .இதற்கடுத்து இயக்குனர் அருன்குமார் புருஷோத்தமனின் 'வாழ்' படத்தை தயாரிக்கிறார் .இவர் நான்காவதாக தயாரிக்கும் டாக்டர் படத்தில் இவரே நடிக்கிறார்.

தற்போது டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் 'வினய்' நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது .ட்விட்டரில் வினயின் புகைப்படத்தை பதிவேற்றி டாக்டர் படத்தில் வினய் இனைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி என தெரிவிக்க பட்டிருக்கிறது .

சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வினயும் பல வருட காலம் முயற்சி செய்து வருகிறார் .அவரின் பாதி கனவு சில படங்களின் மூலம் நிறைவேறி இருந்தாலும் முழுமையாக நிரைவேற வில்லை .இந்த படத்தில் அவருக்கேற்ற கதாபாத்திரம் கிடைக்குமா என்பதனை பொருத்திருந்து பார்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X