உன்னாலே உன்னாலே வினய்.. சூர்யா40 படத்தில் வில்லனாக நடிக்கிறார் !

சென்னை : சூரரைப்போற்று படத்திற்கு பிறகு நவரசா, வாடிவாசல் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.

இதில் நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

சூர்யாவின் 40வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது அதில் வில்லனாக பிரபல இளம் நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்கர் தேர்விலும்

ஆஸ்கர் தேர்விலும்

ஒவ்வொரு படத்திற்கும் கதையில் மட்டும் வித்தியாசம் காட்டாமல் வேடங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்து அசத்தி வரும் சூர்யாவின் ஒவ்வொரு படங்களும் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆன்லைன் தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்ததோடு இப்பொழுது ஆஸ்கர் தேர்விலும் இடம்பெற்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பிரியங்கா அருள்மோகன்

பிரியங்கா அருள்மோகன்

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது இவரது 40 வது திரைப்படமாகும். இந்தப்படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார். சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். முதல் முறையாக சூர்யாவின் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

நெகட்டிவ் ரோல்களில்

நெகட்டிவ் ரோல்களில்

கலகலப்பான குடும்ப பின்னணியைக் கொண்ட படமாக உருவாகி வரும் சூர்யாவின் 40வது திரைப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் இதில் வில்லனாக நடிக்க பிரபல இளம் நடிகர் வினய் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமாகி இளம் பெண்களின் மனதை கொள்ளை அடித்த வினய் இப்பொழுது நெகட்டிவ் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டி துப்பறிவாளன் படத்தில் கொடூர வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

பூஜையுடன் தொடங்கியது

பூஜையுடன் தொடங்கியது

துப்பறிவாளன் தொடர்ந்து இப்பொழுது சூர்யாவின் 40வது படத்திலும் வில்லனாக நடிக்க வினய் ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் . இதன் படப்பிடிப்பு சில வாரத்திற்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X