மாடல் அழகியையும் அவரது தாயையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான்.. விஷால் பட நடிகர் ஒப்புதல்!

திருவனந்தபுரம்: மாடல் அழகி தன் மீது கூறிய பாலியல் குற்றத்தை நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விநாயகன். இவர் சிலம்பாட்டம், மரியான் மற்றும் விஷாலின் திமிரு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாளப் படங்களிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அண்மையில் பாஜகவுக்கு எதிராக கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார் விநாயகன்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மாடலும் சமூக ஆர்வலருமான மிருதுளா தேவி கடந்த ஜூன் மாதம் மீடூவில் நடிகர் விநாயகன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கல்பெட்டா காவல் நிலையத்தில் மிருதுளா தேவி புகார் அளித்திருந்தார்.

உண்மையல்ல

உண்மையல்ல

புகாரின் அடிப்படையில் நடிகர் விநாயகனை கைது செய்த போலீசார் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி விடுவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விநாயகன், நான் நீதிமன்றத்தில் சரணடைந்ததால் என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றாகிவிடாது என்றார்.

குற்றப்பத்திரிக்கை

குற்றப்பத்திரிக்கை

இதனை தொடர்ந்து விநாயகன் தன்னிடம் பேசியது தொடர்பான போன் ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்தார் மிருதுளா தேவி. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை கல்பெட்டா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அதில் மாடல் அழகி மிருதுளா தேவிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கல்பெட்டா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X