twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீ மட்டுமில்ல, உங்க அம்மாவும் படுக்கைக்கு வரனும்.. சமூக ஆர்வலரிடம் சொன்ன 'திமிரு' பட நடிகர்!

    |

    திருவனந்தபுரம்: மலையாள பிரபல நடிகர் தன்னை மட்டுமின்றி, தனது தாயையும் படுக்கைக்கு அழைத்தார் என்று பெண் சமூக ஆர்வலர் கூறியுள்ள புகார் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவை சேர்ந்த பிரபல பெண் சமூக ஆர்வலர் மிருதுளாதேவி சசிதரன். தலித் விவகாரங்களுக்காக குரல் கொடுப்பவர். இவர் சமீபத்தில், மலையாள பிரபல நடிகரான விநாயகனை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க போனில் அழைத்தாராம்.

    நிகழ்ச்சிக்கு வருவேன் அல்லது வர மாட்டேன் என்று விநாயகன் கூறியிருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர் மிக மோசமாக பேசி, சபலம் வெளிப்படுத்தியதாக குமுறுகிறார், மிருதுளாதேவி.

    #MeToo மாடல் கொடுத்த பாலியல் புகாரில் திமிரு பட நடிகர் விநாயகன் கைது! #MeToo மாடல் கொடுத்த பாலியல் புகாரில் திமிரு பட நடிகர் விநாயகன் கைது!

    பேஸ்புக் போஸ்ட்

    பேஸ்புக் போஸ்ட்

    தனது மனக் கொந்தளிப்பை, பேஸ்புக் போஸ்ட்டாக வெளியிட்டிருந்தார், மிருதுளாதேவி. அதில் அவர் சொல்லியுள்ளதை பாருங்க: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் (காரில் கடத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை), பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவு குரல் கொடுத்தவர் விநாயகன். எனவே, அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால், நிஜ வாழ்க்கையில், அவர் வேறு மாதிரி இருக்கிறார்.

    படுக்கைக்கு அழைப்பு

    படுக்கைக்கு அழைப்பு

    நான் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருமாறு விநாயகனை போனில் அழைத்தபோது, அவரோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாரா என கேட்டார். உனது தாயையும் என்னுடன் படுக்க வைக்க வேண்டும் என்றும் சொன்னார். எனக்கு இதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. இவை அனைத்தையுமே, எனது செல்போனில் ரெக்கார்டு செய்து வைத்துள்ளேன். இவ்வாறு தனது பேஸ்புக்கில் மிருதுளாதேவி தெரிவித்திருந்தார்.

    பல பிரிவுகள்

    பல பிரிவுகள்

    இதையடுத்து, கல்பேட்டா காவல் நிலையத்தில், விநாயகனுக்கு எதிராக, மிருதுளாதேவி புகார் அளித்தார். அதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டம், 294 (b), 509, 120 (O) ஆகிய பிரிவுகளின்கீழ், விநாயகனுக்கு எதிராக, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விவகாரம் பெரிதான நிலையில், விநாயகன் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் அளித்த வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டு, ஜாமீனில் விடுவித்தனர்.

    செல்போனில் ஆதாரம்

    செல்போனில் ஆதாரம்

    யதேர்ச்சையாக, விநாயகன் காவல் நிலையம் வந்தபோது, மிருதுளாதேவியும் அங்கே சென்றிருந்தார். அவர் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றிருந்தார். அதில்தான், விநாயகன் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்பதால், போலீசில் செல்போனை ஒப்படைத்துள்ளார்.

    மறுக்கும் நடிகர்

    மறுக்கும் நடிகர்

    இதுபற்றி விநாயகன் கூறுகையில், நான் காவல் நிலையத்தில் சரணடைந்தது உண்மை. அதற்காக, குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தம் இல்லை. ஒரு ஆண்தான் எனக்கு போன் செய்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தார். நான் வர முடியாது என தன்மையாகத்தான் மறுத்துச் சொன்னேன். இதன்பிறகு ஒரு பெண் போன் செய்து, நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்னீர்களாமே என சண்டை போட்டார். அந்த பெண்ணையும் எனக்கு தெரியாது. இவ்வாறு விநாயகன் தெரிவித்தார்.

    பாஜகவுக்கு எதிராக கருத்து

    பாஜகவுக்கு எதிராக கருத்து

    சமீபத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, சமூக வலைத்தளத்தில், ஜாதி ரீதியாகவும், இன ரீதியாகவும், பெரும் கிண்டல், சீண்டல்களுக்கு உள்ளானார் விநாயகன். இவ்வாறு கிண்டல் கேலி செய்வது தவறான செயல் என்று, மிருதுளாதேவி தனது பேஸ்புக் போஸ்டில், தெரிவித்துள்ளார். அதாங்க, விநாயகன் மீது குற்றம் சுமத்தினாரே, அதே போஸ்ட்டில்தான், அவரை கிண்டல் செய்தவர்களை கண்டிக்கவும் தயங்கவில்லை, மிருதுளாதேவி.

    யார் தெரியுமா

    யார் தெரியுமா

    விநாயகன் யார் என்று நினைக்கிறீர்கள்? தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாரே அவர்தான். மலையாளத்திலும் ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு மற்றும் விநாயகன் கைது சம்பவங்கள் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Actor Vinayakan arrested for me too complaint, here is the reaction he has given on the matter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X