#MeToo மாடல் கொடுத்த பாலியல் புகாரில் திமிரு பட நடிகர் விநாயகன் கைது!
திருவனந்தபுரம்: மலையாள மாடலும் சமூக ஆர்வலருமான மிருதுலா தேவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டார்.
பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார்.
தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மாடலும் சமூக ஆர்வலருமான மிருதுளா தேவி அண்மையில் மீடூவில் நடிகர் விநாயகன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

நடிகர் மீது பாலியல் புகார்
இதுதொடர்பாக கல்பெட்டா காவல் நிலையத்தில் மிருதுளா தேவி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நடிகர் விநாயகன் கல்பெட்டா காவல்நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.

கைதான கையொடு பெயில்
அவரை கைது செய்த போலீசார், அவருக்கு உடனடியாக பெயில் வழங்கினர். விநாயகன் காவல்நிலையத்திற்கு சரணடைய செல்லும்போதே கையோடு வழக்கறிஞர் ஒருவரையும் அழைத்து சென்றார். வழக்கறிஞரின் வேண்டுகோளுக்கிணங்க காவல்துறையினர் நடிகர் விநாயகனுக்கு பெயில் வழங்கினர்.

புகாரால் சரண்
இதனை நடிகர் விநாயகனும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விநாயகன், தன் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தான் கல்பெட்டா காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறினார்.

நீதிமன்றத்தின் மூலம் பார்க்கலாம்
தான் சரணடைந்ததால் தன்மீதான புகார்கள் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.தன் மீதான இந்த வழக்கு இனி நீதிமன்றத்தின் மூலம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

ஆதாரங்களை கொடுத்த மிருதுளா
விநாயகன் காவல்நிலையத்தில் சரணடைந்த போது, அவர் மீது குற்றம்சாட்டியிருந்த மிருதுளாவும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது விநாயகன் மீதான புகார் தொடர்பாக தனது போனில் உள்ள ஆதாரங்களை அளிக்க அவர் காவல்நிலையத்திற்கு வந்தார்.

நிறம் சாதி குறித்து விமர்சனம்
அண்மையில் பாஜகவுக்கு எதிராக கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார் விநாயகன். இதற்காக நிறம் மற்றும் சாதியை வைத்து சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார் விநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











