‘சந்திரமுகி‘ காதலன் வினீத்.. படம் வந்தே 20 வருஷமாச்சு.. ஆனாலும், அது மட்டும் மாறல!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் நடிகர் வினீத். 3 முறை கேரள மாநில விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது, நடிகர் வினீத், சந்திரமுகி படத்தின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

1985 ஆம் ஆண்டு வெளியான 'இடநிலங்கள்' என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் வினீத். அந்த படத்தை தொடர்ந்து மலையாள படத்தில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளியான 'ஆவாரம் பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ஆவாரம் பூ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜாதி மல்லி, புதிய முகம், ஜென்டில்மேன் படங்களில் நடித்தார்.

நடிகர் வினீத்: தமிழ் படத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கிலும், இந்தியிலும் நடிகராக அறிமுகமாகி நடித்து வந்த வினீத். 1994 ஆம் ஆண்டு வெளியான 'மே மாதம்' படம் வினீத்துக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில், அடுத்த ஆண்டு வெளியான 'காதல் தேசம்' அவருக்கு பரவலான அடையாளத்தை கொடுத்தது. அப்பாஸ், வினீத் இணைந்து நடித்த இந்தப் படம் அப்போது பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால், வினீத் அனைவரும் கவனிக்கப்படும் நடிகரானார். அந்த படத்தை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அவை எதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சக்தி, தேவதை, நந்தினி, கரிசக்காட்டு பூவே ஆகிய படங்களில் நடித்தார்.

vineeth dance
Photo Credit:

சந்திரமுகி: 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வந்த நடிகர் வினீத், 2005 ஆம் ஆண்டு வெளியான பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில் வெளியான 'சந்திரமுகி' படத்தில் சந்திரமுகியின் காதலனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது பரதநாட்டிய திறமையை பயன்படுத்திக் கொண்ட இயக்குநர் பி.வாசு கதாபாத்திரத்திலேயே அதற்கான தன்மையை எழுதியிருந்தார். அந்த படத்திற்கு பிறகு இவருக்கு நல்ல படவாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு எந்த பட வாய்ப்பும் வினீத்திற்கு வரவில்லை.

எப்படி இருக்கிறார்: இதையடுத்து, 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'உளியின் ஓசை' படத்துக்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'சர்வம் தாளமையம்' படத்தில் நடித்திருந்தார். அண்மையில் அவர் நடிப்பில் 'காதல் என்பது பொதுவுடைமை' படம் நடித்திருந்தார். தமிழ் படங்களில் இவர் தென்படவில்லை என்றாலும், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் வினீத். அவர் கடைசியாக மம்மூட்டியுடன் இணைந்து 'டாமினிக் தி லேடீஸ் பர்ஸ்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் வினீத் கல்லூரி விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்கள் முன் நடனமாடி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், படம் வந்தே 20 வருஷமாச்சு.. ஆனாலும், சந்திரமுகி நடனத்தை மறக்கவேமுடியாது, உங்களையும் மறக்கவே முடியாது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X