அப்படித்தான்.. காலை அமுக்குங்க… மனைவியிடம் மொக்கை வாங்கிய வினோத் பாபு!

சென்னை: நடிகர் வினோத்பாபு மனைவிக்கு பாடிக்கொண்டே கால் அமுக்கிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Velu in Quarantine | Vinoth Babu | Lock Down

நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நாடக நடிகரான வினோத்பாபு ஊரடங்கு சமயத்தில் தன் நேரத்தை முழுவதுமாக தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனது வீட்டில் மனைவிக்கு கால் அமுக்கிய படி 'பூவே செம்பூவே' என்ற இளையராஜாவின் பாடலை பாடி அசத்தியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியிருக்கிறார் .

Actor Vinoth Babus video is goes viral

சொல்ல துடிக்குது மனசு என்ற படத்தில் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடும் பாடல் தான் 'பூவே செம்பூவே' பாடல் இந்த பாடலை மிக அழகாக பாடியிருக்கிறார் வினோத்பாபு. இந்த பாடலை பாடும் போது அவரது மனைவி ஆகா சூப்பர் என்று அவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.

இதன்பின் வினோத்பாபு தன் மனைவியின் காலை அமுக்கி கொண்டே பாடல் நன்றாக இருக்கிறதா என்று கேட்க மனைவி இன்னொரு முறை என்று கூறுகிறார். இதனால், உற்சாகம் அடையும் வினோத் இன்னொரு பாடல் பாடவா என்று ஆர்வமாக கேட்கிறார் ஆனால் அவரது மனைவியோ இல்லை என்று தன் மற்றொரு காலை அமுக்கும் படி கேட்க மொக்கை வாங்கிய படி காலை அமுக்கி விடுகிறார் வினோத்.

வினோத்பாபு தற்போது விஜய் தொலைகாட்சியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் தற்போது பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் வினோத்பாபு ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறார். இதற்கு முன் வினோத்பாபு ஆதித்யா தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்தார்.

ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டிலே இருந்து தங்களின் உறவுகளோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இப்படியாக வினோத்பாபுவும் தன் மனைவியுடன் அதிகபடியான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Read more about: video வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X