Vishal 34: செம விருந்து.. இன்று வெளியாகிறது விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: விஷால் நடிப்பில் தயாராகி வரும் 34வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், சண்டைக்கோழி படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
தனது உடல்வாகுக்கு ஆக்ஷ்ன் திரைப்படம் தான் செட் ஆகும் என நினைத்த விஷால், திமிரு, பாண்டிய நாடு, மருது, துப்பறிவாளன் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

நடிகர் விஷால்: ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நடிகர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் இயக்குநராக விஷால் மாறியுள்ளார். அண்மையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார்.
மார்க் ஆண்டனி: டைம் டிராவல் கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றது. ஏ.ஏ.ஏ கொடுத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரியான கம்பேக் கொடுத்து தியேட்டரை கைதட்டல், விசில்களால் அதிரவைத்தது. கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் 100 கோடியை கடந்துள்ளது
ஹரியுடன் கூட்டணி: மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்து முடிந்தது.
கனல் கண்ணன்: இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக கனல் கண்ணன் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன் விஷாலுடன் சண்டக்கோழி, திமிரு, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
முக்கியமான அறிவிப்பு: இந்த நிலையில் விஷால்34 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் துப்பாக்கியை யாரோ பிடித்திருக்க, அந்த துப்பாக்கியின் முனையில் டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளது. தொடர்ந்து இது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











