விஷால்- சாய் தன்ஷிகா காதல்.. விரைவில் திருமணம்.. உறுதிப்படுத்திய இயக்குநர்.. வெட்கப்பட்ட விஷால்!

சென்னை: நடிகர் விஷால், தன்னுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என கூறி இருந்த நிலையில், அவர் காதலிக்கும் பெண் பற்றிய தகவல் இணையத்தில் கசிந்தன. நடிகை சாய் தன்ஷிகாவை , விஷால் காதலித்து வருவதாகவும், அவரையே கரம்பிடிக்க உள்ளதாகவும் தகவல் பரவிய நிலையில், இருவரும் இன்று பட விழாவில் ஜோடியாக கலந்து கொண்டதை அடுத்து, விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் விஷால், 45 வயதை கடந்த விஷால் இத்தனை ஆண்டு காலம் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் என கூறியிருந்தேன். தற்போது, அந்த வேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில மாதத்தில் பணி முடிவடைந்து விடும். ஆகஸ்ட் 15ந் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவை நடித்தலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதன் பிறகு ஆகஸ்ட் 29ந் தேதி என்னுடைய பிறந்த நாளில், திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன், என்னுடையது காதல் திருமணமாக இருக்கும், கடந்த சில மாதமாக அந்த காதல் சென்று கொண்டு உள்ளது. அவர் யார் என்பது இன்னும் சில மாதத்தில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

Vishal marriage

நடிகை சாய் தன்ஷிகா: நடிகையை விஷால் காதலிப்பதாக கூறியதும், இணையத்தில் பலர், விஷால் காதலிக்கும் பெண் யார்.. அவர் நடிகையா என அலசி ஆராயத் தொடங்கிய நிலையில், விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வருவதாகவும், அவரையே கரம்பிடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. அது உண்மை என்பது போல நடிகை சாய் தன்ஷிகா நடித்திருக்கும், யோகி டா படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயக்குமார், அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு விஷயம், இங்கு நடந்து கொண்டு இருக்கிறது. நடிகர் விஷால் அவர்களும் சாய் தன்ஷிகா அவர்களும் காதல் வயபட்டிருப்பதாக செய்திகளை பார்த்தேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்று சொல்லிவிட்டு, நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகு திருமணமா... என்று உதயக்குமார் விஷாலைப்பார்த்து கேட்க, விஷால் வெட்கத்துடன் தலையை அசைத்து ஆமாம் என்றார்.

விரைவில் திருமணம்: எனக்கு நடிகர் விஷால் அவர்களை மிகவும் பிடிக்கும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசக்கூடிய நபர். அவர் நடிகராவதற்கு முன்பிருந்தே எனக்கு விஷால் அவர்களை நன்றாக தெரியும். விஷாலின் அப்பா என்னுடைய நீண்ட நாள் நண்பர் எந்த விஷயமாக இருந்தாலும் அவர் என்னிடம் மனது விட்டு பேசுவார். மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, ஒரு மிகச் சிறந்த நடிகராக விஷால் இன்று மாறி இருக்கிறார். விஷால் பார்ப்பதற்கு தான் கரடு முரடான நபராக இருப்பார். ஆனால், அவருடைய மனது குழந்தைத்தனமானது. அந்த குழந்தையை நீ தான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் தன்ஷிகா என்று இருவரின் காதலை ஆர்.வி. உதயகுமார் உறுதிப்படுத்தினார். ஆகஸ்ட் 29ந் தேதி நடிகர் விஷாலின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X