மார்க் ஆண்டனி படம் மாநாடு 2னு சொல்லலாம்.. முதல் விமர்சனம் வெளியானது!

சென்னை: மார்க் ஆண்டனி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.

இந்த படத்தின் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Actor Vishal and sj suriya Mark Antony first review

மார்க் ஆண்டனி: டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்த வாரம் வெளியாக உள்ளது.இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

சர்ச்சையான வசனம்: ஐ லவ் யூ டி பாடலில் இடம் பெற்றிருந்த வசனங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.அதே போல அந்த பாடலில் நல்ல வேளை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்த விஷால், அது டபுள் மீனிங் இல்லை, படத்தின் கிளைமாக்ஸ் பார்க்கும் போது புரியும் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

ப்ளாக் பஸ்டர் லோடிங்: இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் பார்த்த Executive Producer ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பு வேற லெவல், தெரிச்சிடீங்க. விஷால் நடிப்பு சூப்பர். பல சர்ப்ரைஸ் படத்தில் இருக்கிறது. படத்தில் ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லை. என்ன மாதிரியான படத்தை எடுத்துருக்கீங்க ஆதிக் ரவிச்சந்திரன் சார். ஜி. வி. பிரகாஷ் பட்டையை கிளப்பியுள்ளார். ப்ளாக் பஸ்டர் லோடிங்.. என கூறியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா: இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள எஸ்.ஜே. சூர்யா, கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டே அனுப்புறியே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை நினைத்து நான் உண்மையில் பெருமை அடைகிறேன். இந்த படம் மாநாடு 2னு சொல்லலாம், அப்படி ஒரு ஸ்கிரீன் ப்ளே என எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X