Vishal: இதே வேலையா போச்சு.. இயக்குநர் மிஷ்கினை வறுத்தெடுத்த விஷால்.. இவ்வளவு காட்டமா?
சென்னை: நடிகர் விஷாலின் மதகஜராஜா படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் விஷால் மற்றும் சந்தானத்தின் காமெடி மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில் பத்ம விருதுகளை பெற்றுள்ள நடிகர் அஜித்குமார் மற்றும் ஷோபனாவிற்கு விஷால் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் விஷால் அடுத்தடுத்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இளையராஜா குறித்து மரியாதை குறைவாக பேசிய மிஷ்கினுக்கும் விஷால் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதேபோல எப்போதும் பேசிவிட்டு வருத்தத்தை தெரிவிப்பது மிஷ்கினுக்கு வாடிக்கையாக உள்ளதாகவும் அவர் கோபத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஷால்: இயக்குநர் மிஷ்கின் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். அவரது இயக்கத்தில் பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படங்கள் அடுத்தடுத்த ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார் மிஷ்கின். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாட்டில் ராதா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மரியாதை குறைவாக பேசியது அனைத்து தரப்பினரையும் கோபப்பட வைத்தது. பல்வேறு கண்டனங்களையும் மிஷ்கின் சந்தித்தார். இந்நிலையில் தான் கூறிய விஷயங்களுக்காக அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
விஷால் காட்டம்: இந்நிலையில் மிஷ்கினுக்கு இதே வேலையாக போய்விட்டது என்று நடிகரும் நடிகர் சங்க பொதுச் செயலாளலுமான விஷால் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷோபனா பத்ம விருதுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்து கடிதங்களை அனுப்புவதற்காக தான் நடிகர் சங்கத்திற்கு வந்ததாக விஷால் தெரிவித்திருந்துள்ளார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நடிகர் அஜித்குமார் மற்றும் ஷோபனாவிற்கு அவர் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நிலையில் அடுத்ததாக மிஷ்கின் குறித்த கேள்விக்கு அவர் மிகவும் கோபமாக பதிலளித்ததை பார்க்க முடிந்தது.
இளையராஜா கடவுளின் குழந்தை: மிஷ்கின் எப்போதும் இதே போல பேசிவிட்டு பின்பு அதற்கு வருத்தம் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக விஷால் கோபத்துடன் கூறியதை பார்க்க முடிந்தது. நீங்க தண்ணியடிங்க, எதை வேண்டுமானாலும் பேசுங்க. அனைவருக்கும் பேசுவதற்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால் மேடை நாகரிகம் என்று ஒன்றுள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார். இளையராஜா கடவுளின் குழந்தை போன்றவர் என்றும் அவரை மரியாதை குறைவாக பேசியதை மன்னிக்க முடியாது என்றும் விஷால் தெரிவித்துள்ளார். பேசுவதை பேசிவிட்டு ஒருநாள் கழித்து மன்னிப்பு கேட்டதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிஷ்கினின் சுபாவம்: இந்நிலையில் கூத்துப்பட்டறையில் தான் விமல், விதார்த் உள்ளிட்டவர் பல நடிகர்கள் இருந்ததாகவும் அங்கு யாருக்கும் இதுபோன்று பேச சொல்லி கொடுக்கப்படவில்லை என்றும் விஷால் தன்னுடைய கருத்தை மேலும் வெளிப்படுத்தினார். சரக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மிஷ்கின் பேசுவதாக காட்டத்தை வெளிப்படுத்திய விஷால், ஒரு கட்டத்தில் அது அவரது இஷ்டம் என்றும் அவரது சுபாவம் என்றும் தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











