நீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்!
நடிகர் விவேக் அரசியலுக்கு வர வேண்டும் என நடிகர் விஷால் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: நடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு ஒரு நல்ல அமைச்சர் கிடைப்பார் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின். நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்த படம், தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா, நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
நடிகர் சிம்பு டிரெய்லரை வெளியிட்டார். படத்தில் நடித்த சிறுவர்கள், விழா மேடையில் தற்காப்பு கலைகளை செய்து காட்டினர். இதனை நடிகர் விஷால் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " இந்த சிறுவர்கள் என்னை அசத்திவிட்டார்கள். இனி என்னை ஆக்ஷ்ன் ஹீரோ என சொல்ல மாட்டேன். அந்த அளவுக்கு இந்த பசங்க அசத்தி இருக்காங்க. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை என்பது மிகவும் அவசியம். குழந்தைகளை வைத்து ஒரு முழு மார்சியல் ஆர்ட்ஸ் படம் எடுக்க தைரியம் வேண்டும்.
நடிகர் விவேக் எதையும் தைரியமாக பேசக்கூடியவர். அவர் அரசியலுக்கு வந்தால், ஒரு தொகுதிக்கு நல்ல எம்.எல்.ஏ. கிடைப்பார். மக்களுக்கு நல்ல மந்திரியும் கிடைப்பார்.
இந்த படத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுனையாக இருக்கும். முன்கூட்டியே தெரிவித்தால், நல்ல ரீலஸ் தேதியை பெற்று தருவோம். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்"
இவ்வாறு நடிகர் விஷால் பேசினார்.


Click it and Unblock the Notifications











