விஜய்யை காப்பி அடித்த விஷால்...இப்படி ஒரு என்ட்ரியை யாரும் எதிர்பார்க்கல!

சென்னை : லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழாவிற்கு சைக்கிளில் வந்த விஷாலை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான இவர், நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழக்கையை தொடங்கினார்.

தொடர்ந்து 2004-ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் தொடர்ந்து சண்டகோழி, திமிரு என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தார்.

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

ஹிட் படங்களில் நடித்து வந்த விஷாலுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆர்யாவுடன் நடித்த எனிமி, வீரமே வாகை சூடும் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் தற்போது விஷால் புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யுவன் இசை

யுவன் இசை

ராணா புராடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகை சுனைனா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், விஷால் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் கான்ஸ்டபிளாக நடித்து அனைவரின் கவனம் ஈர்த்துள்ளார்.

வரவேற்பை பெற்ற டீசர்

வரவேற்பை பெற்ற டீசர்

லத்தி டீசர் பலரின் பாராட்டை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,100க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுற்றி நிற்க, ரத்தம் வழிந்த முகத்தோடு தப்பு பண்ணிட்டு ஓடி ஒளியிற பொறுக்கி உனக்கே இவ்வளவு திமிரு இருக்கும் போது, அந்த தப்பை தட்டிகேட்கும் போலீஸ்காரன் எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என்று சிங்கம்போல கர்ஜிக்கிறார். தனி ஒருவராக லத்தியை மட்டுமே வைத்துக் கொண்டு வேட்டையாடுகிறார் விஷால்.

விஜய்யை பார்த்து காப்பி

விஜய்யை பார்த்து காப்பி

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவிற்கு நடிகர் விஷால் சைக்கிளில் வந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்தது போல, விஷாலும் ஏதோ புதுசா டிரைப்பண்ணி இருக்கிறார் என்றும், விஜய்யை பார்த்து காப்பி அடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் இரண்டு வீடியோவையும் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X