Vishal: என்னது விஷாலுக்கு இப்படியொரு மகனா.. பிறந்தநாள் பார்ட்டியே கொண்டாடி இருக்காரு பாருங்க!
சென்னை: நடிகர் விஷால் நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.
அடுத்ததாக இவரது நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகவுள்ளது. இதில் இருவேறு கெட்டப்புகளில் இவர் நடித்துள்ளார்.
முன்னதாக அதிரடி ஆக்ஷன் களத்தில் விஷால் நடித்திருந்த லத்தி, இவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது.

மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஷால்: நடிகர் விஷால் நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருபவர். அதிகமான ஹிட் படங்களை கொடுத்த விஷாலுக்கு சமீப காலங்களாக எந்தப்படமும் சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான லத்தி படம் ஆக்ஷன் ஜானரில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்திற்காக பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தார் விஷால். ஆனாலும் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இந்நிலையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார் விஷால். டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் சுனில், ரிது வர்மா உள்ளிட்டவர்கள் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளனர். இருவேறு காலகட்டங்களில் பயணிக்கும் இந்தப் படத்தில் வித்தியாசமான இரண்டு கெட்டப்புகளில் விஷால் நடித்துள்ளார். இவருடன் எஸ்ஜே சூர்யாவும் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் விஷால். இவர் தற்போது தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். என்னது விஷாலுக்கு மகனா, இன்னும் திருமணமே ஆகலையேப்பா என்று யோசிக்கிறீர்களா. அந்த அளவிற்கு எல்லாம் யோசிக்க வேண்டாம். தன்னுடைய வீட்டின் செல்ல நாய்க்குட்டி குறித்துதான் விஷால் இதுபோன்ற பதிவினை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய செல்லப்பிராணியான நாயின் 14வது ஆண்டு பிறந்தநாளைத்தான் தற்போது கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் விஷால். இதன் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால், ஹேப்பி பர்த்டே மை சன் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். நாய்க்கு பர்த் கேப்பெல்லாம் போட்டு அலப்பறை செய்துள்ளார். நாயின் பெயர் Augie என்றும் குறிப்பிட்டுள்ளார். மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்தை அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஷால்.
அடுத்ததாக ஹரி இயக்கத்திலும் கமிட்டாகியுள்ளார் விஷால். விஷால்34 என்ற இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். ஆக்ஷன் ட்ரீட்டாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 15ம் தேதி முதல் துவங்கியுள்ளது. படத்தில் விஷாலுக்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார். விஷால் -ஹரி கூட்டணி இந்தப் படத்தின்மூலம் 3வது முறையாக இணைந்துள்ளது. முன்னதாக தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் இவர்களது காம்போவில் வெளியானது.


Click it and Unblock the Notifications











