Vishal: அப்பா பிறந்தநாளில் விஷால் கேக் வெட்டி கொண்டாட்டம்.. திருமண கொண்டாட்டம் எப்பங்க!

சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் இணைந்து வருகிறார்/ கடந்த ஆண்டில் விஷால் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சொதப்பலான ரிசல்ட்டையே கொடுத்தது. இதையடுத்து அடுத்ததாக விஷால் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாக உள்ளது துப்பறிவாளன் 2.

Vishal GK reddy tamil cinema

நடிகர் விஷால்: நடிகர் விஷால் நடிகர். தயாரிப்பாளர். இயக்குனர் என அடுத்தடுத்த பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் வலம் வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களையும் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படம் டைம் ட்ராவலை மையமாகக் கொண்டு வெளியானது. படத்தில் அடுத்தடுத்த கெட்டப்புகளில் எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் இருவரும் தோன்றியிருந்தனர். இந்த படம் மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது.

ரத்னம் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விஷால், ப்ரியா பவானி சங்கர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ரத்னம் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். அதிரடி ஆக்சன் மற்றும் ரத்த களரியுடன் இந்த படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் ரிசல்ட்டை கொடுக்கவில்லை. வசூலிலும் சொதப்பியது. இந்நிலையில் அடுத்ததாக விஷால் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான சூட்டிங் லண்டனில் நடக்கவுள்ள சூழலில் அதற்கான லொகேஷன்கள் மற்றும் பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளை விஷால் முடித்துள்ளார்.

அப்பா பிறந்தநாள்: இதனிடையே, விஷாலின் திருமணம் குறித்து தான் எப்போதுமே ரசிகர்களிடம் கேள்விகள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் 40 வயதை கடந்த நிலையில் அவர் திருமணம் குறித்து எதுவும் கூறாமல் உள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது. முரட்டு சிங்கிளாகவே இருந்துவந்த நடிகர் பிரேம்ஜியும் தற்போது திருமண வலையில் சிக்கியுள்ளார். ஆனால் விஷால், சிம்பு உள்ளிட்ட சிலர் அது குறித்து எதுவுமே பேசாமல் எஸ்கேப் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய அப்பாவின் பிறந்த நாளை தன்னுடைய வீட்டில் கேக் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார் நடிகர் விஷால்.

திருமண கொண்டாட்டம்?: இதையடுத்து அவர் திருமண கொண்டாட்டத்தை எப்போது மேற்கொள்ளப் போகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். விரைவில் விஷாலிடம் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லராக வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மாஸ் காட்டியது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஷூட்டிங் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்திலேயே துவங்கிய நிலையில் விஷால் மற்றும் மிஷ்கின் இடையில் ஏற்பட்டசில மனக்கசப்புகள் காரணமாக துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X